வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் ஸ்கால்ப் மசாஜ்! எப்படி செய்வது?
முகத்தின் அழகை பிரதிபலிப்பதில் தலைமுடிக்கு எப்போதும் மிகப் பெரும் பங்கு காணப்பகின்றது என்றால் மிகையாகாது.
தற்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலைமுடிப் பிரச்சினை காணப்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் நாம் தலைமுடி பராமரிப்புக்காகக் காலம் காலமாக பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தது தான்.
குறிப்பாக ஆண்களை பெருத்தவரையில் இளவயதிலேயே பல பேருக்கு வழுக்கை விழ ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் ஏற்படும் மன உழைச்சல் ஆண்களுக்கு மட்டுமே புரியும்.
இவ்வாறு இளம் வயதிலேயே வழுக்கை விழுந்துவிட்டால், அத்தோடு வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் சில ஆண்கள் நினைத்துக்கொள்கின்றார்கள்.
ஆனால் உண்மையில் முறையான பராமரிப்பு இருக்கும் பட்சத்தில் வழுக்கை தலையிலும் மீண்டும் முடிவளர்ச்சியை ஏற்படுத்தலாம். அதற்கு எளிமையாக வீட்டிலேயே செய்யகூடிய ஸ்கால்ப் மசாஜ் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உதிர்ந்த தலைமுடியையும் மீண்டும் பெற...
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெய் என நீங்கள் விரும்பும் ஏதாவது ஒரு எண்ணெயை தெரிவு செய்து அதனை லேசாக சூடுப்படுத்திக்கொள்ள வேண்டும்.(மயிர்கால்களின் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்க இளம் சூட்டில் இருப்பது அவசியம்).
பின்னர் இந்த எண்ணெயை கொண்டு நகங்களை பயன்படுத்தாமல் விரல்களால் தலை முழுவதும் வட்ட வடிவில் லேசான அழுத்தத்துடன் மசாஜ் செய்ய வேண்டும்.
அதிக அழுத்தம் கொடுக்கமால் முடியின் நுண்ணறைகளில் (follicles) படும் வகையில், குறைந்தது 5 தொடக்கம் 7 நிமிடங்களுக்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இதே முறையில் வாரத்தில் 3 அல்லது 4 முறை கட்டாயம் மசாஜ் கொடுக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் நிச்சயம் வழுக்கை தலையிலும் மீண்டும் முடிவளர்ச்சியை ஏற்படுத்தலாம்.
மேலும் முடி உதிர்வு பிரச்சினையால் பாத்திப்பட்டவர்களுக்கு இந்த முறையானது முடி உதிர்வை கட்டுப்பபடுத்தவும் ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியாக கூந்தலை பெறவும் பெரிதும் துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |