strawberry mousse : குக் வித் கோமாளி ஷபானாவின் பாணியில் ஸ்ட்ராபெரி மூஸ்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரான நடிகை ஷபானா கடந்த வாரம் செய்து காட்டிய italian strawberry mousse தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியலர்கள் வரையில் அனைவரும் விரும்பும் இந்த ரெசிபியை எவ்வாறு எளிமையாக வீட்டில் செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
விப்ட் கிரீம் (Whipped Cream)
சர்க்கரை
ஸ்ட்ராபெரி
செய்முறை
முதலில் ஸ்டாராபெரியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதன் மேல் துண்டை நீக்கிவிட்டு துண்டுகளாக வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடள் 1/2 கப் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு விப்ட் கிரீமை எடுத்து அதனுடன் அரைத்த ஸ்டாபெரி சாஸை சிறிது சிறிதான சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
பின்னர் விரும்பிய வடிவில் பாத்திரம் அல்லது ஆரஞ்சு பழத்தின் மேல்பகுதியில் சிறிய துண்டை வெட்டி உள்பகுதியை குடைந்து நீக்கிவிட்டு, தயார் செய்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் மிக்ஸியில் விழுதாக அரைத்து ஸ்ட்ராபெர்ரியை சிறிது ஊற்றி அதன் மேல் விப்பிங் க்ரீமை நிரப்பி பின்னர் சிறிது ஸ்ட்ராபெர்ரியை விழுது சேர்த்து அடுக்குகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியான சிறிது விப்பிங் கிரீம் ஊற்றி நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி வைத்து அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை 3 தொடக்கம் 4 மணிநேரம் குளிரூட்டியில் வைத்து எடுத்தால் அவ்வளவு தான் சுவையான Strawberry mousse தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |