கோபிநாத்தையே வாயடைக்க வைத்த கேரள இளைஞர்! அப்படியென்ன செய்தார் தெரியுமா?
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் இந்த வாரம் பிரபல நடிகையால் எழுந்த வாடகைத் தாய் தலைப்பை இந்த வார விவாதமாக தெரிவு செய்து பேசியுள்ளார்.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. வாடகை தாயை ஆதரிப்பவர்கள்... அதனை எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் வைக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த தருணத்தில் இருந்து தற்போது வரை வாடகை தாய் என்ற டாப்பிக் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இதனையே இந்த வாரம் விாத்திற்கு பிரபல ரிவி தெரிவு செய்துள்ளது.
வாடகை தாயின் வேதனை
எந்தவொரு தலைப்பாக இருந்தாலும் கோபிநாத் பேசும் விதம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிகமாகவே கவரும் விதமாக இருக்கின்றது.
இந்நிலையில் நீயா நானா நிகழ்ச்சிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுத்த பெண் தங்களது வழிகளை பகிர்ந்துள்ளார். இவரின் பேச்சைக் கேட்ட அனைவரும் கண்கலங்கியுள்ளனர்.
இதே போன்று வாடகை தாய் பிரச்சினை ஆதரிப்பவர்கள் பக்கத்தில் கேரள இளைஞர் ஒருவர் இருந்துள்ளார். இவர் பல விடயங்களைப் பேசிய நிலையில், இறுதியில் நாட்டில் வறுமையை ஒழிக்க முயற்சி செய்யுங்கள் என்று தனது பாணியில் கூறியுள்ளது கோபிநாத்தை வாயடைக்க வைத்துள்ளது.