அழும் நிலைக்கு சென்ற கோபிநாத்! நீயா நானா நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் இந்த வாரம் வாடகைக்கு வீடு விடும் உரிமையாளர்களிடம் ஏக்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. வீடு வாடகைக்கு செல்பவர்கள், வீட்டின் உரிமையாளர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
அழும் நிலைக்கு சென்ற கோபிநாத்
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்கள், வாடகைக்கு செல்லும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு வரும் நபர்களிடம் ஏகப்பட்ட கண்டிஷன் போட்டுள்ளனர். அதில் ஒன்று சுவற்றில் ஆணி அடிக்கக்கூடாது.
அப்பொழுது கோபிநாத் நான் எழுந்து எங்க அப்பா முகத்தை பார்க்கனும்னா? என்று கேட்டதற்கு வீட்டு உரிமையாளர் பெண் ஆணி அடிக்கக்கூடாது... என்றே பதில் கூறியுள்ளார்.
இதில் இறுதியாக கோபிநாத் அப்போ எங்க அப்பா போட்டோ பார்க்கக்கூடாதா? என்று குழந்தை போன்று ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.