கோபிநாத் காலில் விழுந்து கதறிய பெண்! கண்கலங்கிய நீயா நானா அரங்கம்
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் பெண் ஒருவரை டைனோசரை தவிர அனைத்தையும் சாப்பிடும் குடும்பம் என்று கோபத்தில் கொந்தளித்துள்ள சம்பவம் இந்த வார ப்ரொமோ காட்சியாக வெளியாகியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் தமிழ் கணவர்களும், வேற்று மாநிலத்தைச் சேர்ந்த மனைவிகளும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
கோபிநாத் காலில் விழுந்த பெண்
ப்ரொமோ காட்சியில் தமிழ் கணவர்களை திருமணம் செய்த வேற்று மாநிலத்து பெண்கள் பேசியுள்ளனர். இதில் பெண் ஒருவர் வட மாநிலத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சகோதரர் ரக்ஷா பந்தனுக்கு அழைப்பார் என்று 19 ஆண்டுகளாக காத்திருக்கும் சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த பெண் நீயா நானா கோபிநாத்தை அண்ணனாக கருதி அவருக்கு ராக்கி கட்டிவிட்டு, அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளது அரங்கத்தையே கண்கலங்க வைத்துள்ளது.