Astrology: தங்கத்தை யாரெல்லாம் அணியக்கூடாது தெரியுமா? ஜோதிடம் கூறும் உண்மை
ஜோதிடத்தில் குறிப்பிட்ட சிலருக்கு தங்கம் ராசியாக இருக்காது என கூறப்படுகின்றது. இது பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
யாருக்கு தங்கம் ராசியாக இருக்காது?
ஜாதி மத பேதமின்றி நாம் வாங்கி பயன்படுத்தும் ஒரு புனிதமான உலோகம் என்றால் அது தங்கம் தான். தங்கம் என்பது எவ்வளவு விலை அதிகமாக விற்கப்பட்டாலும் அதை வாங்க மக்கள் பஞ்சப்பட்டதில்லை.
ஒரு சிலர் இதை புனிதமான பொருளாக கருதுகின்றனர். ஒரு சிலர் இதை முதலீடாக கருதி வாங்குகின்றனர். தங்கம் அணிந்தால் நமது உடலில் உள்ள தீய சக்திகள் விலகி விடும் என்ற நம்பிக்கையும் உண்டு.
தங்கத்திலான மோதிரத்தை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் வலது கையிலும் அணிவது நன்மை தரும். நமது உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து உடலின் ஆரோக்கியத்தையும் இது சீராக வைத்துக்கொள்ளும்.
புகழ் வேண்டும் என நினைப்பவர்கள் நடுவிரலில் தங்க மோதிரத்தை அணியலாம். திருமணமாகாமல் இருந்தாலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்றாலும் கழுத்துடன் ஒட்டிய தங்க நகைகளை போடலாம்.
இது நல்ல பெறுபேற்றை தரும். தங்கத்தை எப்போதும் இடுப்பு பாகத்தின் மேல் தான் அணிய வேண்டும்.
தங்கத்தை யார் அணிய கூடாது?
வயிறு தொடர்பான சிக்கல்கள் உள்ளவர்கள், அதிக எடை உள்ளவர்கள் அதிகமாக கோபப்படுபவர்கள் மற்றும் இரும்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் தங்கத்தை அணிய கூடாது.
இது தவிர தங்கத்தை அணிந்தபடி உல்லாச பொழுதுபோக்கில் ஈடுபட கூடாது.இப்படியானவர்களுக்கு தங்கம் அதிஷ்டத்தை கொடுக்காது என கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
