வாடகை தாய் குறித்து கோபிநாத் எழுப்பிய அதிரடி கேள்வி! அதிர்ச்சியில் அரங்கம்
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் இந்த வாரம் பிரபல நடிகையால் எழுந்த வாடகை தாய் தலைப்பை இந்த வார விவாதமாக தெரிவு செய்து பேசியுள்ளார்.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சியி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த தருணத்தில் இருந்து தற்போது வரை வாடகை தாய் என்ற டாப்பிக் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இதனையே இந்த வாரம் விாத்திற்கு பிரபல ரிவி தெரிவு செய்துள்ளது.
வாடகை தாய் குறித்து கோபிநாத் எழுப்பிய கேள்வி
எந்தவொரு தலைப்பாக இருந்தாலும் கோபிநாத் பேசும் விதம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிகமாகவே கவரும் விதமாக இருக்கின்றது.
இந்நிலையில் தற்போது கோபிநாத் ஏன் வாடகை தாய் முறையை எதிர்க்கிறீர்கள்? என்ற கேள்வியியுடன் நீயா நானா நிகழ்ச்சியின் புதிய அரங்கத்தில் நின்று ஆரம்பித்துள்ளார்.
தற்போது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த தலைப்பில் கோபிநாத்தின் விவாதத்தினைக் காண மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.