18 ஆண்டுகளுக்கு முன் பிரேக் அப் செய்த காதலனை 52 வயதில் 4 வது திருமணம் செய்துகொண்டார் நடிகை!
ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ் 18 ஆண்டுகளுக்கு முன் காதலித்து பிரேக் அப் செய்த நடிகரை தற்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
52 வயதாகும் ஜெனிபர் லோபஸ், தன்னைவிட 3 வயது இளையவரான நடிகர் பென் அஃப்லெக்கை கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
முதல் சந்திப்பு
நடிகர் பென் அஃப்லெக்கும், நடிகை ஜெனிபர் லோபஸும் கடந்த 2002-ம் ஆண்டு முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர்.
அந்த சமயத்தில் கிக்லி என்கிற படத்தில் நடித்தபோது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இதையடுத்து 2 ஆண்டுகள் டேட்டிங் செய்துவந்த இந்த ஜோடி கடந்த 2004-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து பிரிந்தனர்.
விவாகரத்தில் முடிந்த திருமணங்கள்
இதையடுத்து நடிகர் ஜெனிபர் லோபஸ் நடிகர் ஒஜானி நோவா, டான்ஸர் கிரிஸ் ஜட் மற்றும் பாடகர் மார்க் ஆண்டனி ஆகியோரை திருமணம் செய்தார்.
இந்த மூன்று திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
இவருக்கு மேக்ஸ் மற்றும் எம்மே என 14 வயதான இரட்டைக் குழந்தைகள் உள்ளன.
அதேபோல் நடிகர் பென் அஃப்லெக்கும் ஏற்கனவே நடிகை ஜெனிபர் கார்னெர் என்பவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்துவிட்டார். இத்தம்பதிக்கு ஒய்லெட், செரபினா, சாமுவேல் என மூன்று குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் தான் நடிகை ஜெனிபர் லோபஸை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.