மாநாடு திரைப்படத்தில் சிம்பு மறைத்த காதல் ரகசியம் - மீம்ஸ் போட்டு தெறிக்க விடும் ரசிகர்கள்
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாநாடு. இந்த திரைப்படம் வெளியான முதல்நாளே மாநாடு திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் தனது முத்திரையை பதிவு செய்தது.
அமோக வரவேற்பை பெற்ற இப்படம் 25-ம் தேதி, தமிழ்நாட்டில் மட்டும் ரூ 6.37 கோடியும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூ. 90 லட்சம் முதல் 1 கோடியும், வெளிநாட்டு சந்தையில் ரூ 1.2 கோடியும் வசூலித்தது.
எனவே மாநாடு படம் தொடக்க நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ 8.40 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் மாநாடு படத்தில் நயனுடன் ஏற்பட்ட காதல் ரகசியத்தை காட்சியாக அமைத்துள்ளனர்.
அந்த காட்சியை எடுத்து ரசிகர்கள் மீம்ஸாக உருவாக்கி நயனை குறிப்பிட்டு தான் அமைக்கப்பட்டுள்ளது என ட்ரெண்டாக்கி வருகின்றனர்.