செத்துவிடுவேன் என அடிக்கடி மிரட்டுவாள்! திவ்யா குறித்து வெளியான பகீர் தகவல்
தன்னை அடிக்கடி மிரட்டுவதே திவ்யாவின் வேலை என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் அர்ணாவ்.
கடந்த சில நாட்களாகவே சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர், நடிகர் அர்ணாவ் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் தன்னை அடித்து துன்புறுத்துவதாக திவ்யா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
காதல் திருமணம்
கேளடி கண்மணி தொடரில் இணைந்து நடித்ததன் மூலம் திவ்யாவும், அர்ணாவும் பழக்கமாகியுள்ளனர்.
திவ்யா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணமாகி, திவ்யா கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் வேறொரு நடிகையுடன் நெருங்கி பழகும் அர்ணாவ், தன்னை ஒதுக்குவதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா போலீசில் புகார் அளித்தார்.
இதன் பேரில் விசாரணை நடந்து வரும் நிலையில், பல தகவல்களை வெளியிட்டுள்ளார் அர்ணாவ்.
என்னை அடிக்கடி மிரட்டுவாள்
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அர்னாவ், 2017-ல் அவள் எனக்கு புரொபோஸ் செய்யும் போது, முதலில் அதிர்ச்சியடைந்தேன்.
ஏனெனில் அவளுக்கு திருமணமாகி இருந்தது, நான் கேட்டதற்கு விவாகரத்து வாங்கப் போவதாக கூறினாள்.
6 மாதம் கழித்து விவாகரத்தாகிவிட்டது என்றாள், அதன்பின்னர் தான் நான் அவளை காதலிக்கத் தொடங்கினேன்.
அவள் குழந்தையை கூட அக்கா குழந்தை எனக்கூறி என்னை நம்பவைத்தாள், இந்த உண்மை கடந்த பிப்ரவரியில் தான் எனக்கு தெரிந்தது.
ஆனாலும் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, நான் ரம்ஜான், பக்ரீத் சமயங்களில் ஊருக்கு கிளம்பும் போது, கையை அறுத்துக் கொண்டு, சேலையில் தூக்கு மாட்டிக் கொண்டு, நீ ஊருக்கு போனால் நான் செத்து விடுவேன் என மிரட்டுவாள்.
நல்ல பெண் தான், ஆனால் சில சமயங்களில் இதுமாதிரி நடந்து கொள்வாள், இதற்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறாள்.
என்னை கேட்காமல் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது என அனைத்தையும் எனக்கு எதிராகவே செய்தாள். உன்னையும், உன் குடும்பத்தையும் நிம்மதியாக இருக்க விட மாட்டேன் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே என்னை மிரட்டுவாள் என தெரிவித்துள்ளார்.