காதலிக்கும் போதே சக நடிகருடன் நெருக்கமான பேச்சு! ரகசிய ஆடியோவை வெளியிட்ட கணவன்
சம்யுக்தா - விஷ்ணுகாந்த் இவருவரும் அண்மையில் திருமணம் செய்துக் கொண்டவர்கள் இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து செய்துக்கொள்ளும் அளவிற்கு சென்றதற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
சம்யுக்தா - விஷ்ணுகாந்த்
சினிமாவில் காதல் திருமணம் என்றால் பஞ்சம் இல்லாத அளவிற்கு ஆகிவிட்டது. அப்போதைய சினிமாவில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.
அதுபோல சீரியல்களில் நடிப்பவர்களும் தனக்கு ஜோடியக நடிக்கும் நடிகை, நடிகர்களுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து ஜோடியாகவும் நடிக்கிறார்கள்.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வந்தவர்கள் தான் சம்யுக்தா - விஷ்ணுகாந்த். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் செய்துக் கொண்டார்கள்.
இந்நிலையில், தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் இருந்து நீக்கி விவாகரத்து செய்து கொள்ளும் அளவிற்கு சென்றிருக்கிறது.
இது தான் காரணமா?
தற்போது இவர்கள் இருவரும் அடிக்கடி அடுத்தடுத்து மாற்றி மாற்றி தன் பக்க நியாயங்களை வீடியோ மூலம் வெளியிட்டு வந்தார்கள்.
இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சம்யுக்தா பற்றிய ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணுகாந்த். இந்த ஓடியோவில் சம்யுக்தா ஒரு பக்கம் ரவியுடனும் பேசிவிட்டு இந்தப் பக்கம் விஷ்ணுகாந்தையும் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் திருமணம் முடித்த பிறகும் ரவியுடன் “நீயில்லாமல் இருக்க முடியாது” என்ற அளவிற்கு பேசியிருக்கிறார். மேலும், சம்யுக்தா ரவியை காதலித்துக் கொண்டிருக்கும் போது ரவி சம்யுக்தாவிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்றும் பல உண்மைகளை சம்யுக்தா அதில் பகிர்ந்து இருக்கிறார்.
ஏதோ ஒரு உண்மையை வாக்குவதற்காகத்தான் ரவியுடன் அந்த அளவிற்கு பேசியதாகவும், தன்னுடன் முன்னாள் காதல் பற்றி விஷ்ணுகாந்த் சம்யுக்தாவுடன் பகிர்ந்துக் கொண்ட போதிலும் சம்யுக்தா ரவி பற்றிய எந்த விடயத்தையும் சொல்லாமல் மறைத்திருக்கிறார்.
குறித்த ஆடியோவைக் கேட்ட ரசிகர்கள் பலரும் இதுநாள் வரை சம்யுக்தாவிற்கு ஆதரவாக இருந்தவர்கள் தற்போது விஷ்ணுகாந்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.