30 நாட்களில் பிரிந்து விட்டோம்... பல உண்மைகளை அம்பலப்படுத்திய பிரபலங்கள்
திருமணமாகி சுமார் இரண்டு மாதங்களில் விவாகரத்து பெறுவதற்கான காரணத்தை நடிகை சம்யுக்தா அப்பட்டமாக பேசி வீடியோக்காட்சியொன்றை வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து, ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகர் விஷ்ணுகாந்த்.
இதனை தொடர்ந்து சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் செய்து தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது. இருந்த போதிலும் இவர்களுக்கு சில வாய் தகராறு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிகின்ற நிலைமைக்கு வந்துள்ளார்கள்.
மேலும் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் ன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து திருமணத்தின் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பில் சமிபத்தில் பேட்டியொன்றில் விரிவாக கூறியிருக்கிறார் நடிகர் விஷ்ணுகாந்த்.
சம்யுக்தா மீதான குற்றஞ்சாட்டுகள்
அதில்,“திருமணத்திற்கு முன்னர் அப்பாவை பிடிக்காது என கூறிய சம்யுக்தா தற்போது எதுக்கு எடுத்தாலும் அப்பாவை அழைத்து வந்து நியாயம் பேசுகிறார். நான் ஏதாவது கூறினால் என்னோடு சண்டைக்கு வருவார்.
மேலும் என்னை பற்றி இன்ஸ்டாவில் மறைமுகமாக போஸ்ட்கள் போடுவார் இது குறித்து கேட்டால் பெயர் குறிப்பிடவில்லை என்பார். நான் பேச வேண்டாம் எனக் கூறுகின்ற நண்பர்களுடன் தான் அதிகம் பேசுவார்.
இது குறித்து கேட்டாலும் நா பேசுவேன் என கூறுவார். சிறுசிறு சண்டைகளுக்கு எல்லாம் அவரின் அப்பா தலையீடுவார். இதனால் என்னுடைய சில நண்பர்களை அழைத்து வந்து பேசினேன். “ கண்டவுங்க எல்லோருக்கும் நான் பதில் கூற வேண்டியதில்லை.” என கூறிவிட்டார்” என கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகை சம்யுக்தா சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோக்காட்சியை பகிர்ந்துள்ளார்.
என்னை அடிக்கடி திட்டுவார்
அதில்,“ விஷ்ணுகாந்த் ஒரு முன் கோபக்காரர். நான் செய்யும் சிறுசிறு விடயங்களுக்கு கூட என்னை திட்டுவார். மேலும் நான் செய்யாத சில விடயங்களுக்கு அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளேன். என்னால் இது மேல் பொறுமையாக இருக்க முடியாது.
எனக்கும் விஷ்ணுகாந்திற்கும் சுமார் 10 வயது வித்தியாசம். ஆனாலும் என்னை இவர் சரியாக பார்த்து கொள்ளவில்லை. எனக்கு ஒரு பிரச்சினை என்றால் என்னோடு அப்பா வருவார். அது படி தான் அவரும் வந்தார். நான் கோபத்தில் தான் அப்பா வேண்டாம் எனக் கூறினேன்.
இப்போது அவர் மீது கோபம் இல்லை. விஷ்ணுகாந்த் எங்களது திருமணத்திற்காக 10 இலட்சம் செலவு செய்ததாக கூறினார். ஆனால் அது சுத்த பொய்.. அப்படி ஒரு செலவும் இல்லை” என வீட்டில் நடந்த அனைத்து விடயங்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த சீரியல் ரசிகர்கள்,“ பிடிக்கவில்லையென்றால் விவாகரத்து பெற்று செல்லுங்கள்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
[
]