பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை பாடாய்படுத்திய இயக்குனர்: சினிமாவில் ஏற்பட்ட மனக்கசப்பை பகிர்ந்த லாவண்யா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் லாவண்யா சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுவத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்தப் பாசக்கதையை கேட்கவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தில் 4 அண்ணன் தம்பிகள் இருக்கின்றார்கள். இவர்கள் நால்வரும் தற்போது திருமணம் செய்து விட்டார்கள்.
இவர்களின் மூன்றாவது தம்பியான கதிரின் மனைவியாக நடிப்பவர் தான் முல்லை என்கின்ற லாவண்யா. இவர் இவர் இதற்கு முன் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலின் மூலம் நம் அனைவருக்கும் பரீட்சமாகியிருந்தார்.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடித்து வருகிறார். இந்தக் கதாப்பாத்திரத்தில் முதன் முதலாக சித்ரா தான் நடித்து வந்தார்.
அவர் உயிரிழந்து விடவும் அவருக்கு பதிலாக காவ்யா அறிவுமணி நடித்திருந்தார், அவரும் இந்த சீரியலில் இருந்து விலகவே அவருக்கு பதிலாக லாவண்யா முல்லையாக மாறினார்.
இவரும் அவர்களைப் போலவே, அவர்களின் இடத்தை நிரப்பி அழகாக நடித்து வருகிறார்.
எப்போதும் என்னுடன்......
இந்நிலையில் இந்த சீரியலில் தற்போதைய முல்லையாக நடித்து வரும் நடிகை லாவண்யா அண்மையில் ஒரு பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் தெரவித்தாவது,
பிரபல இயக்குநர் ஒருவர் தன்னிடம் போனில் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் எனவும் அப்படி செய்தால் ஆறு மாதத்திற்கு பிறகு அவரது கேரியரையே வேறு லெவலுக்கு எடுத்துச்செல்வேன் என்று கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியன லாவண்யா பெரிதுப்படுத்தாமல் தனது எதிர்காலத்தை எண்ணி பயந்து அமைதியாகிவிட்டாராம். அதன்பிறகு அந்த இயக்குநரிடமிருந்தும் விலகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.