கணவரிடம் சண்டையிடுவதற்காக நேரலையில் காத்திருக்கும் சம்யுக்தா! கருத்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் என்ன சொல்ல போகிறார் என பார்ப்பதற்காக சமூக வலைத்தளங்களில் நேரலையில் சமியுக்தா காத்திருக்கும் வீடியோக்காட்சி வைரலாகி வருகின்றது.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து, ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகர் விஷ்ணுகாந்த்.
இதனை தொடர்ந்து சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் செய்து தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது. இருந்த போதிலும் இவர்களுக்கு சில வாய் தகராறு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிகின்ற நிலைமைக்கு வந்துள்ளார்கள்.
மேலும் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் ன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து திருமணத்தின் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.
நேரலையில் காத்திருக்கும் சம்யுக்தா
இந்த நிலையில் சமிபத்தில் இருவரும் தங்களின் பக்கங்களில் இருக்கும் விடயங்களை சமூக வலைத்தளங்களில் நேரலையாக ரசிகர்களுக்கு கூறி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து விஷ்ணுகாந்த் அவர்கள் இன்றைய தினம் 6 மணியளவில் நேரலைக்கு வரப் போவதாகவும் அதற்காக தான் நான் நேரலையில் காத்திருக்கிறேன் எனவும் சம்யுக்தா அவர்கள் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இதற்கு அவர்களின் ரசிகர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.