சாய்பல்லவி போல செக்கச்சிவந்த கன்னங்கள் வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க!
பொதுவாகவே எல்லோரும் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவார்கள்.
அப்படி முகத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்பவர்களுக்கு முகத்தில் சிறிய கரும்புள்ளிகள் தோன்றினாலே உடனே அடுத்த வைத்தியத்தை தேடிப்போவார்கள்.
அதுபோலத்தான் ஒவ்வொருத்தரின் முகமும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும் அதிலும் ஒவ்வொரு பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் கன்னங்கள் இரண்டும் செக்கச் சிவந்து இருக்கும்.
அதில் சிலருக்கு இயற்கையாகவே அப்படி இருக்கும் ஒரு சிலர் நமக்கு அப்படியே ரோசாப் பூ போல சிவந்த கன்னங்கள் வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருப்போம் அப்படியானவர்களுக்கு இந்த டிப்ஸ் உபயோகமாக இருக்கும்.
சிவந்த கன்னங்களுக்கு
1. சிவந்த கன்னங்களை பெறுவதற்கு தினமும் நாம் உடற்பயிற்சி செய்தால் இரத்த ஓட்டம் அதிகமாகும் இது கன்னங்களை சிவப்பாக மாற்றும்.
2. உங்கள் கன்னங்களை விரல் நுனிகளை வைத்து சொப்ட்டாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து கன்னங்கள் சிவக்கும்.
3. இயற்கைப் பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வதன் மூலமும் கன்னங்கள் சிவக்கும்.
4. நீங்கள் தினமும் உண்ணும் உணவில் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிவந்த கன்னங்களைக் கொடுக்கும்.
5. தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். இது நமது உடலில் உள்ள நச்சுகளையும் அகற்றி விடும்.
6. உங்கள் சருமத்தை வெதுவெதுப்பான நீரில் ஆவிப்பிடித்தல் வேண்டும்.
7. நீங்கள் பயன்படுத்தும் சன் ஸ்கிரீன் சரும பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்து சிவப்பான கன்னங்களை கொடுக்கும்.