இரண்டாவது திருமணத்திற்க்கு பின்பு பெயரை மாற்றிய சமந்தா
நடிகை சமந்தா இரண்டாவது திருமணத்திற்கு பின்பு தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு தனது பெயரை சமந்தா அக்கினேனி என்று மாற்றிக் கொண்ட இவர் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

பின்பு விவாகரத்திற்கு பின்பு தனது பெயரை மீண்டுமாக சமந்தா ரூத் பிரபு என்று பழையவாயே மாற்றிக் கொண்டார். இந்நிலையில் சமந்தாவிற்கு கடந்த டிசம்பர் மாதம் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டும் வருகின்றனர்.
தற்போது சமந்தா Maa Inti Bangaram என்ற படத்தை தயாரித்து நடித்து வருகின்றார். இந்நிலையில் மீண்டும் தனது பெயரை மாற்றியுள்ளார்.

ஆம் இரண்டாவது கணவருடன் சேர்த்து சமந்தா நிடிமோரு என்று தான் கிரெடிட்ஷில் பயன்படுத்த உள்ளாராம். இவர் விரைவில் இன்ஸ்டாகிராமில் தனது பெயரையும் மாற்றிவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |