8 வாரங்களுக்கு கட்டுடன் தான்! விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் சேதுபதிக்கு கைவிரல் முறிவா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி படிப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி கையில் விரல் முறிவு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. தனது இயல்பான நடிப்பால் குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்டுவிட்டார்.

சினிமாவில் எவ்வித பின்புலமும் இல்லாமல் தன் திறமையாலும் நன் வித்தியாசமான நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தையும் மக்கள் மனதில் ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டார்.

மேலும் பிக்பாஸ் சீசன் 8 மற்றும் 9 யை தொகுத்து வழங்கியதன் மூலம் மேலும் மக்களுக்கு நெருக்கமாகிவிட்டார்.

படப்பிடிப்பின் போது விபத்து ஏற்ப்பட்ட இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது நடித்துவரும் ‘பத்தா’ திரைப்படத்தின் பட போது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் படப்பிடிப்பின் ஒரு காட்சியை படமாக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த குறித்த விபத்தினால், கைவிரலில் காயம் ஏற்பட்டதாகவும்,இதையடுத்து மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளதாகவும், காயத்தின் தன்மையை பரிசோதித்த மருத்துவர்கள், அடுத்த 8 வாரங்களுக்கு கை விரலில் கட்டு அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |