சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா? தெளிவாக விளக்கும் மருத்துவ நிபுணர்
சமீப காலமான சிக்குன்குனியா பரவல் அதிகரித்து வருவதால், பெரும்பாலானவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றார்கள்.
இன்னுமே பலர் சிக்கன் சாப்பிடுவதன் மூலம் தான் சிக்குன்குனியா பரவுவதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது?
சிக்கன் சாப்பிடுவதால் சிக்குன்குனியா பரவுகிறதா என்பதற்கான தெளிவான விளக்கத்தை டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ள விடயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த சில வாரங்களாகவே சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு, காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் கூடிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் பலரும் சிக்கன் சாப்பிடுவது குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். காரணம் சிலர் இன்னுமே சிக்கன் சாப்பிடுவதால் தான் சிக்ககுன்குனியா பரவுவதாக நம்புகின்றனர்.
சிக்கன் -சிக்குன்குனியா
மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி குறிப்பிடுகையில், உண்மையில் சின்கன் சாப்பிடுவதற்கும் சிக்ககுன்குனியா ஏற்படுவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த பெயர் கிமோகோண்டே மொழியில் "குன்குன்யாலா" என்றால் "வளைத்துப் போடுவது" என்று அர்த்தம். அதில் இருந்து மருவி உருவான வார்த்தைதான், சிக்கன்குனியா.

அதாவது நோய்த்தொற்றுக்கு உள்ளானவருக்கு கடுமையான மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஏற்படும். ஆனால் இதற்கும் சிக்கன் சாப்பிடுவதற்கும் துளியும் தொடர்பு இல்லை.
சிக்கன்குனியா முதலில் 1952 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் முதலில் கண்டறியப்பட்டது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள்தான், சிக்கன்குனியாவையும் பரப்புகின்றன.
அதனால் எங்கெல்லாம் டெங்கு பரவும் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் சிக்கன்குனியாவும் நோய் தொற்றும் பரவும் வாய்ப்பும் அதிகம்.

இந்த வகை கொசுக்களின் கால்கள் வெள்ளை மற்றும் கருப்பு நிற கோடுகள் இருப்பதால், இது புலி கொசுக்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த வைரஸ் கிருமி நமது ஃபைப்ரோபிளாஸ்ட்கள், தசை செயற்கைக்கோள் செல்கள், மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வு மற்றும் அவற்றில் உள்ள தசை கடுமையாக பாதிக்கிறது.

இது வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மூட்டுகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும் என மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |