இலங்கையில் கெத்தாக சுற்றித்திரியும் vj மணிமேகலை! அவரே வெளியிட்ட பதிவு
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலையின் தற்போது இலங்கை சென்றுள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயற்கை எழில் கொஞ்சும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.
vj மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களுள் ஒருவர் தான் மணிமேகலை. சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய இவர் மேலும் பிரபல்யம் அடைந்தார். கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.அதைடியெல்லாம் கடந்த தனது காதல் கணவருடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றார்.

தற்போது ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் மணிமேகலை இந்த ஆண்டு ஆரம்பித்தில் இருந்தே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக லண்டன், மற்றும் துபாய்க்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், இந்த புதிய வருடம் எனது பயணம் இப்படியே சென்று கொண்டிருக்கிறது. 2026ல் இது எனது 3வது நாடு பயணம் என குறிப்பிட்டு இலங்கையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |