ஆரம்பமாகும் புதன் பெயர்ச்சி- பிரச்சனையில் மாட்டபோகும் ராசிகள்
தற்போது கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி இடம்பெறுவதால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் எடுத்ததெல்லாம் பிரச்சனையாக வந்து முடியப்போகின்றது.
புதன் பெயர்ச்சி
இந்த 2026ம் ஆண்டின் முதல் மாதத்தின் முடிவு நாளை முடியும். இதனை தொடர்ந்து மாசி மாதம் ஆரம்பிக்கபட்ட உள்ளது. இதில் பல கிரக பெயர்ச்சிகள் நடைபெறும்.
இந்த பெயர்ச்சிகளால் 12 ராசிகள் அதாவது மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு வெவ்வேறு பலன்கள் சல்ல பலன் கெட்ட பலன் என இடம்பெறும்.

இந்த நிலையில் தற்போது மாசி மாதத்தின் தொடக்கத்திலேயே கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் தனது ராசியை மாற்ற உள்ளார்.
மாசி மாதம் 03ஆம் தேதி புதன் கும்ப ராசிக்கு செல்கிறது. கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால், அந்த ராசிக்கு புதல் செல்வதால், சில ராசிகள் எதிர்மறையான பலன்களை பெறக்கூடும்.
இந்த புதன் பெயர்ச்சி காரணமாக சில ராசிகளுக்கு தீமையான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. அது எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

கடகம்
- புதன் கடக ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைவதால் உங்கள் ராசிக்குநிறைய பிரச்சனை வரும். செய்யும் வேலையில் பிரச்சனை வரும்.
- சிறிய வேலையையும் கஷ்டப்பட்டு செய்வீர்கள். முதலீடுகளை தவிர்க்க வேண்டும். சிந்திக்காமல் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் நஷ்டம் ஏற்படலாம்.
- குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரும்.
தனுசு
- புதன் தனுசு ராசியின் 3வது வீட்டில் பெயர்ச்சி அடைவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு எக்கச்சக்க சவால்களை வரும். தொழிலில் மந்தமாக இருப்பீர்கள்.
- வேலை செய்பவர்களுக்கு உடன் பணிப்புரிபவர்களுடனோ அல்லது உயர் அதிகரிகளுடனோ வாக்குவாதம் ஏற்படும். அது உங்களின் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
- முதலீடுகள் செய்யும்போது ஒன்று இரண்டு முறை யோசித்து கவனமுடன் செய்யவும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வரக்கூடும். மொத்தத்தில் கவனமாக இருப்பது நல்லது.
மகரம்
- புதன் மகர ராசியின் 2ஆம் வீட்டிற்கு செல்ல உள்ளது. இது அந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும். வேலையில் பதவி உயர்வு வரும் போல இருக்கும் ஆனால் வராமல் போகலாம்.
- நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் இதனால் நீங்கள் நண்பர்களிடம் இருந்து பிரிந்து இருப்பீர்கள். கோபத்தால் பலரை இழப்பீர்கள். பணப் பிரச்சனை அதிகரிக்கும்.
- வேலையில் அதிருப்தி ஏற்படும். மொத்தத்தில் இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்கள் நிதானமாகவும் பொருமையுடனும் இருக்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).