சீரியல் நடிகை அஞ்சலிக்கு அடித்த ஜாக்பாட்- வாழ்த்தி தள்ளும் ரசிகர்கள்
சீரியல் நடிகை அஞ்சலிக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சக்திவேல்
கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பட்ட தொடர் தான் சக்திவேல்.
இந்த சீரியல் தற்போது 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பிரவின் ஆதித்யா மற்றும் அஞ்சலி பாஸ்கர் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது கதையில் சிவபதி, தென்னரசு பற்றி தெரிந்துகொண்டு அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.
அதன் பின்னர் தனக்கு இனி வேலன் தான் என முடிவு எடுக்கிறார். ஆனால் வேலன், சக்திக்கு கொடுத்த நம்பிக்கைக்காக இனி அடிதடியில் இறங்க கூடாது என முடிவு எடுத்துள்ளார். இதனால் அவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.
புதிய வாய்ப்பு
இப்படியொரு பக்கம் சக்திவேல் சீரியல் சென்றுக் கொண்டிருக்கையில், தற்போது சக்தியாக நடிக்கும் நடிகை அஞ்சலி மலையாளத்தில் புதிய தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
Krishna Gaadha என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் அஞ்சலி 2 கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சின்னத்திரை பிரபலங்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

