புதிய தோற்றத்தில் களமிறங்கிய ஸ்ருதிஹாசன்... இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்
நடிகை ஸ்ருதிஹாசன் கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஸ்ருதிஹாசன்
உலக நாயகனாக திகழும் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் பிரபல பாடகியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார்.அதுமட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலம் தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார்.
தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான ‘ஹேராம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், தமிழ் ரசிகர்களுக்கு 2011ஆம் ஆண்டு அறிமுகமானார்.
சூர்யாவுக்கு நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.
அதனை தொடர்ந்து தனுஷ் நடிபில் வெளியான 3, தளபதிக்கு ஜோடியாக புலி, தல அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் நடிப்பில் வெளியான 'இனிமேல்' என்ற பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது.அதில் ஸ்ருதி லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் புதிய புயலையே கிளப்பியது.
அதனை தொடர்ந்து ஸ்ருதி ஹாசனினின் நீண்ட நாள் காதலன் சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த ஆண்டு பிரேக்கப் செய்திருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து ஸ்ருதிஹாசன் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |