ரூ.4600 கோடி சொத்து மதிப்பு கொண்ட பிளாப் பட நடிகை யார் தெரியுமா?
13 ஆண்டுகளாக ஒரு ஹிட் கூட கொடுக்காத நடிகை ஒருவரின் சொத்து மதிப்பு ரூ.4600 கோடி இருக்கும் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த நடிகை யார்?
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகிகளாக இருக்கும் ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல நடிகை கூறலாம்.
இவர்களுக்கு மத்தியில் சுமாராக 13 ஆண்டுகள் ஒரு திரைப்படம் கூட ஹிட் கொடுக்காத ஒரு நடிகையொருவர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா.
இவர், கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘Hurun Rich List 2024’ அறிக்கையின்படி, இந்தியாவின் பணக்கார நடிகையாக வலம் வருகிறார். இவரது சொத்து மதிப்பு சுமாராக ரூ.4,600 கோடியாகும். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளியான எந்த படமும் ஹிட்டாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பிரபலமான ஜூஹி சாவ்லாவின் கோடிக்கணக்கான சொத்து மதிப்புக்கு காரணம் அவரின் சினிமா வாழ்க்கை அல்ல. மாறாக பல பிஸ்னஸ்களை செய்து வருகிறார்.
4600 கோடி எப்படி வந்தது?
இந்த நிலையில், பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் கிரிக்கெட் டீம் ஒன்றிலும் முதலீடு செய்திருக்கிறார். பாலிவுட்டில் ஜூஹி சாவ்லாவும், ஷாருக்கானும் நெருங்கிய நண்பர்களாம். இவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
அதில், ஜூஹி சாவ்லா ரூ.623 கோடிக்கு முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஊடக அறிக்கையின்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.9,139 கோடி, அதில், ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா இருவரும் ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்தில் இணை பங்குதாரர்களாக இருக்கிறார்கள்.
Saurashtra Cement 0.07 சதவீதம் பங்குகளையும் வைத்திருக்கிறார். மும்பையில் இரண்டு ரெஸ்டாரன்ட்டுகளுக்கு உரிமையாளராக இருக்கிறார். மும்பையில் பிரமாண்ட பங்களா, குஜராத்தில் மிகப்பெரிய பங்களா ஆகியன உள்ளன.
அஸ்டான் மார்டின் ரேபிட் (ரூ.3.3 கோடி), பிஎம்டபள்யூ 7- சீரிஸ் (ரூ.1.8 கோடி), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் (ரூ. 1.7 கோடி மதிப்பு), ஜாகுவார் எக்ஸ்ஜே (ரூ. 1.2 கோடி மதிப்பு), மற்றும் போர்ஷே கெய்ன் (ரூ. 1.36–2 கோடி மதிப்பு) ஆகிய விலை உயர்ந்த கார்களையும் வைத்திருக்கிறார்.
கடந்த 1986-ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர், கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் “ப்ரை டே நைட் ப்ளான்” என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |