சமைத்த சோறை மீண்டும் மீண்டும் சூடாக்குறீங்களா? இந்த பிரச்சனை வரும்
அரியை சமைத்து அதை மீண்டும் மீண்டு சூடாக்கினால் என்ன பிரச்சனை வரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சோறு
தமிழர்களின் ஒரு நாள் உணவில் சோறு இல்லாமல் அன்றைய நாள் அவர்களுக்கு நிறைவடையாது. சோறு நல்ல ஆற்றலை உடலுக்கு தரும்.
இதனால் வெறும் சாதம் அல்லது பருப்பு சாதம் இப்படி சாதத்தை வைத்து பல வெரைடி உணவுகள் செய்வார்கள். ஆனால் சிலர் சமைத்த சோற்றை மீண்டும் மீண்டும் சூடாக்கி சாப்பிடுவார்கள்.
பலரும் பழஞ்சோறு உடலுக்கு ஆரோக்கியம் என கூறுவார்கள். ஆனால் சமைத்த சோற்றை மீண்டும் மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதால் உடலுக்கு பக்க விளைவுகள் வரும் என்பது உங்களில் யாருக்கு தெரியும். இதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பக்க விளைவுகள்
சாதத்தை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டாலோ இல்லை இதை தவறான முறையில் சேமித்து வைத்தாலோ அதில் பேசிலஸ் செரியஸ் (Bacillus cereus) என்ற பாக்டீரியா வரும். இரு உடலில் அதிக பாதிப்பை கொண்டு வரும் என்று சொல்லப்படுகின்றது.
நாம் உணவை சமைக்கும் போது அதில் பல பாக்டீரியாக்கள் இறந்து விடும் ஆனால் பேசிலஸ் சீரியஸின் பாக்டீரியாக்கள் சாகாது. அவை வெப்பத்திலும் கூட உயிர்வாழும்.
சமைத்த அரிசியை அறை வெப்பநிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைத்திருந்தால், இந்த பாக்டீரியாக்கள் வளர்ந்து நச்சுகளை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன.

நாம் இப்போது அரிசியை சமைத்து முதலில் சோறு வரும் போது அதில் எவ்வித கிருமிகளும் இருக்காது. இதை பல மணி நேரம் வளியில் வைத்து விட்டு அதை திருமபவும் சூடாக்கும் போது அதில் பேசிலஸ் சீரியஸின் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்து இருக்கும்.
இதை மேலும் மேலும் நீங்கள் சூடாக்கினால் கூட அவை உடலில் அப்படியே இருக்கும். இதனால் நமது உடலுக்கு பல நோய் வரும். ஒரு கடமையான வயிற்று வலி வரும்.
இதபோன்ற சோற்றை நீங்கள் சாப்பிட்ட 1 முதல் 6 மணி நேரத்திற்குள் அறிகுறிகள் தோன்றும். குமட்டல், வாந்தி, வயிற்று வலி அல்லது பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் சில நேரங்களில் லேசான காய்ச்சல் போன்ற சில அசௌகரியங்களை நீங்கள் அனுபவிக்க நேரிடும்.

முக்கிய குறிப்பு
- சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் சோற்றை ஒரு பெரிய தட்டில் போட்டு பரப்பி குளிவிக்க வேண்டும்.
- மிகவும் சூடான சாதத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது.
- எப்போதும் அரிசியை காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |