மேக்கப் போடாமல் அழகாக ஜொலிப்பது எப்படி? சாய்பல்லவியின் பியூட்டி சீக்ரெட்!
தமிழ், மலையாளம், தெலுங்கு என சினிமாவில் ஒரு கலக்கு கலக்கும் சாய்பல்லவி தனது அழகை பராமரிக்கும் ரகசியத்தைக் கூறியிருக்கிறார்.
சாய்பல்லவி
பிரேமம் என்ற ஒரே ஒரு திரைப்படத்தின் மலர் டீச்சராக அத்தனை மக்களின் மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் சாய்பல்லவி.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்து பல படங்களை நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் உடன் மாரி 2 திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
அந்தத் திரைப்படத்தில் தனுஷிற்கு நிகராக ஆடிய ரௌடி பேபி பாடலும் நடனமும் இன்னும் வைரலாகிக் கொண்டுதான் இருக்கிறது.
அதன் பிறகு சூர்யா உடன் என்.ஜி.கே படத்திலும் நடித்திருந்தார்.
அழகு குறிப்பு
சாய்பல்லவிக்கு அழகே அவரின் நீண்ட கூந்தலும், சிவந்த கண்ணங்களும் தான். ஆனால் அவர் எப்போதும் மேக்கப் போட்டுக் கொள்வதில்லையாம்.
அப்போ எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றுக் கேட்டால் எல்லாம் இயற்கை அழகுதான் என்று சொல்வார். அவரின் அழகிற்கு இது தான் காரணம்.
சாய் பல்லவி வெளி உணவுகளையும் துரித உணவுகளையும் சாப்பிடுவதில்லை. எப்போதும் வீட்டில் தயாரிக்கும் உணவுகளைதான் உண்ணுவாராம்.
தினமும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதால் தான் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கிறார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு தினமும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து குறைந்தால் அதிக நோய்கள் வரும் அதனால் எப்போதும் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாய்பல்லவி செயற்கை அழகு பொருட்களை விட இயற்கையான அழகான பொருட்களைத் தான் அதிகம் விரும்புவாராம். மேலும், இவர் எப்போதும் மேக்கப்பை தவிர்த்து விடுவாராம்.