தனுஷின் பாடலால் ஒரே நாளில் ஹிட்டான மருத்துவர்... வெளியிட்ட காணொளியை பாருங்க
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் மாரி. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் மாரி-2. இந்தப் படத்தில் தனுஷ் சாய்பல்லவியுடன் இணைந்து நடித்திருந்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற முக்கியமான பாடல் ரவுடி பேபி. யுவன் இசையில் தீ பாடிய இந்த ரவுடி பேபி பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த பாடலை மாற்றியமைத்து பாடி, மருத்துவர் ஒருவர் பிரபலமாகி இருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் Dr.K.பாஸ்கர்.
இவர் தமது நோயாளிகளின் நலனில் அக்கறைகொண்டு ரவுடி பேபி பாடல் பாடல் வரிகளை மாற்றியமைத்து நோயாளிகளுக்கு புதுவிதமான மெசேஜ் சொல்வது போல் இந்த பாடலை பாடி பதிவேற்றி இருக்கிறார். இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பாக BP கூட ரவுடிதான் எனும் ஹெல்த் அட்வைசரியுடன் தொடங்கும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ள “ஏய்.. ரொம்ப உப்பு போடாதே.. ரொம்ப எடை கூடாதே”, “மை டியர் பேஷண்ட்.. நீ மனசு வெச்சா பிபி குறைச்சிடலாம் நெஞ்ச காப்பாத்திடலாம்” எனும் வரிகள் பலரையும் கவர்ந்துள்ளன.
டாக்டர்கள் இதற்கு மேல்
— Arjun Saravanan (@ArjunSaravanan5) April 22, 2021
என்ன செய்ய முடியும்?
அறிவுரை சொன்னார்கள்
கெஞ்சி கேட்டார்கள்.
பயமுறுத்தவும் செய்கிறார்கள்.
முன்களப் பணியாளர்களை மதிப்போம்.
கொரோனா விழிப்புணர்வு பாடல் அடுத்து வரும் என நம்புகிறேன்.#WearAMask pic.twitter.com/gOeDBYiU2u