சுட்டெரிக்கும் வெயிலிளை சமாளிப்பது எப்படி? இதை செய்யாமல் இருக்காதீங்க
இந்தியா போன்ற நாடுகளில் கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால், மக்கள் பயங்கரமாக தவித்து வருகின்றனர்.
அதிலும் ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். இத்தருணத்தில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.
கோடை வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?
இந்த வெயில் காலத்தில் நபர்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும். குறிப்பாக மாலை 12 மணியிலிருந்து 3 மணி வரை குழந்தைகள், பெரியவர்கள் வெளியே செல்லக்கூடாது.
தினமும் 4 முதல் 5 லிற்றர் தண்ணீர் பருக வேண்டும்.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தர்ப்பூசணி அவசியம் எடுக்க வேண்டும்.
மேலும் வெயில் காலத்தில் சாம்பார் சாதம், சப்பாத்தி, கேழ்வரகு அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
இளநீர், மோர், தயிர், தர்பூசணி, நுங்கு ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளவும்.
ஃப்ரிட்ஜில் உள்ள தண்ணீரை பருகாமல், மண்பானை தண்ணீரை பருகுவது உடல் தொந்தரவு இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
இறுக்கமான உள்ளாடைகளை அணிய வேண்டாம்.
வெயிலில் செல்பவர்கள் முகம் கழுத்து பகுதிகளில் சன் ஸ்கீம் தடவி விட்டுச் செல்லவும்.