60 வயதிலும் ஹீரோயின் போல் இருக்கும் நீதா அம்பானி: உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க இதை தான் சாப்பிடுகிறாரா?
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி இந்த வயதிலும் அழகில் ஜொலிப்பதற்கான ரகசியத்தை சொல்லியிருக்கிறார்.
நீதாவின் அழகு ரகசியம்
60 வயதானாலும் இன்னும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு இது தான் சில டிப்ஸ்கள் இதோ, என்னதான் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் உணவு விடயத்தில் எப்போதும் அளவாகத் தான் இருப்பாராம்.
நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானி உடல் எடையை குறைக்க ஆரம்பித்த போது இவரும் அவருடன் சேர்ந்து வேர்க் அவுட்களை செய்திருக்கிறார் அப்போது இவரும் 18 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் அதிகம் உடற்பயிற்சிகளை செய்து வந்தாலும், போகப் போக அதன் மேல் இருந்த ஆர்வம் குறைந்து விட்டதாம். இவரின் மிகப் பெரிய நம்பிக்கையே பிட்னஸ்ஸாக இருந்தால் எவ்வளவு வயதானாலும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது தான்.
இவர் தினமும் 40 நிமிடங்களுக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வாராம். அதுமட்டுமல்லாமல் யோகா, நீச்சல், டான்ஸ் என்பவற்றை செய்வாராம்.
தினமும் இரவில் நேரத்தோடு உறங்கச் சென்றுவிடுவாராம் காலையில் நேரத்தோடு எழும்பி விடுவாராம்.
கொழும்பு மற்றும் கார்போஹைரேட் உணவுகளை எல்லாம் தவிர்த்து விட்டு நார்ச்சத்துக்களையும் புரத உணவுகளையும் உண்கிறாராம்.
காலையில் உலரந்த பழங்களையும், முட்டையின் வெள்ளைக் கரு, பழ ஜுஸ் இவற்றைதான் எடுத்துக் கொள்வாராம். மதிய வேலைகளில் பச்சை காய்கறிகளையும், கீரை வகைகளையும் சூப் செய்து சாப்பிடுவாராம்.
அவரின் தோல் பளபளப்பிற்கு அதிகம் பழங்களைத் தான் எடுத்துக் கொள்வாராம்.