40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அப்படியொரு அழகு! பொறாமைப்பட வைக்கும் புகைப்படங்கள்
40 வயதை கடந்தும் இன்றும் இளம் நடிகை போல் புகைப்படம் வெளியிடும் கனிஹாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் தல அஜித்தின் “வரலாறு“ திரைப்படத்தில் பிரபலமாகியவர் தான் நடிகை கனிஹா.
இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “5Star“ திரைப்படத்தில் அறிமுகமானார்.
மேலும் கனிஹாவின் “ஆட்டோகிராஃப்” திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து நடிகை கனிஹா தமிழ் சினிமாவில் ஒரீரு படங்கள் நடித்தாலும் மலையாளத்தில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.
விளம்பரங்கள், சின்ன சின்ன படங்கள், முக்கிய கதாபாத்திரங்கள் என நடித்து வந்த கனிஹா கடந்த 2008 ஆம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் இருக்கிறார்.
கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த பிரபலம்
இந்த நிலையில், கனிஹா தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்,“ எதிர்நீச்சல் ” என சீரியலில் லில்ட் ரோலில் நடித்து வருகிறார்.
ஆனாலும் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், மார்டன் ஆடையில் கிளாமர் காட்டும் கனிஹா தற்போது அடக்கமான ஆடை அணிந்து அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ வயதானது உங்கள் அழகில் தெரியவில்லை.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.