சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்குவது இவர் தானாம்!
வெள்ளித்திரை போன்று சின்னத்திரையில் அதிகம் பணம் சம்பாரிக்கும் பிரபலங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் குறைவான சம்பளத்தில் தான் சினிமாவிற்குள் வந்திருப்பார்கள்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கான மார்க்கட் உயர உயர சம்பளத்தின் மாற்றம் ஏற்படும். டாப் நடிகராக மாறிய பின்னர் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக மாற்றமடைவார்கள்.
இதன்படி, ஆரம்பக்காலத்தில் சினிமாவில் நடித்து விட்டு அதன் பின்னர் தன்னுடைய இறுதி காலத்தை சின்னத்திரையில் கழிப்பவர்களுக்கு தான் இவ்வாறான வாய்ப்புகள் கிடைக்கும். இவர்கள் சினிமாவில் சம்பாரிக்கும் பணத்தை விட அதிக பணம் இந்த சின்னத்திரையில் சம்பாரிப்பார்கள்.
அந்தவகையில், சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் ஐந்து பிரபலங்கள் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
அதிக சம்பளம் வாங்கும் சின்னத்திரை பிரபலங்கள்
1. நடிகை அம்பிகா
தன்னுடைய பருவக்காலத்தில் ரஜினி, கமல் உள்ளிட்டோருடன் நடித்து விட்டு, தற்போது 2021 ஆம் ஆண்டிலிருந்து பிரபல தொலைக்காட்சியில், “ அருவி” என்ற சீரியலில் “சரஸ்வதி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் 80 கள் காலப்பகுதியில் டாப் நடிகையாக இருந்தமையினால் இவரின் சம்பளம் சின்னத்திரையிலும் அந்தளவிற்கு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் அருவி சீரியலில் நடிப்பதற்காக 12 இலட்சம் ரூபாய் வாங்குகிறாராம்.
2. நடிகர் மாரிமுத்து
வெள்ளத்திரையிலும் நடித்து கொண்டு பிரபல தொலைக்காட்சி “ எதிர்நீச்சல் ” என்ற சீரியலில் “குணசேகரன்” எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் மூத்த அண்ணன் என்றபடியால் அதிகமான முக்கியத்துவம் பெறுகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில், "ஏ..இந்தாமா என்ன வேணும்.?" எனும் ஒரே வார்த்தையில் பிரபல்யமடைந்து விட்டார் என்றே கூற வேண்டும். மேலும் இவருக்கு ஒரு எபிசோடுக்கு 35 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
3. நடிகை சத்யபிரியா
நடிகை சத்யபிரியா “எதிர்நீச்சல்” என்ற சீரியலில் குணசேகரனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இவர் ஆரம்பக்காலத்தில் சினிமாவில் வில்லியாக நடித்து வந்தார். இதனை தொடர்ந்து சீரியல்களில் அம்மாவாகவும், மாமியாராகவும் நடித்து வருகிறார்.
இவரின் நடிப்பு பார்ப்பதற்கு இயல்பாக இருக்கும். சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வந்தமையினால் இவருக்கான ரசிகர்களும் அதிகமாக இருந்து வருகிறார்கள். இவர் ஒரு எபிசோட்டிற்காக இருபது ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதற்காக கூறப்படுகிறது.
4. நடிகர் பப்லு
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதாநாயகராகவும், சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களாகவும், வில்லனாகவும் நடித்தவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் “கண்ணான கண்ணே” என்ற சீரியலில் “கௌதம்”என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் ஒரு எபிசோட்டிற்கு குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் வரை வாங்குகிறார்.
5. நடிகை கனிஹா
இவர் ஆரம்பக்காலத்தில் தமிழ் சினிமாவில் இருக்கும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டு, தற்போது முதன் முறையாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் “ எதிர்நீச்சல்” என்ற சீரியலில் குணசேகரனுக்கு மனைவியாக நடித்து வருகிறார்.
இவரின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் பலரை கவர்ந்த படியால் இவருக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இவர் ஒரு எபிசோட்டிற்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம்.