மார்டன் உடையில் இளம் நடிகைகளை தெறிக்கவிட்ட 80ஸ் நடிகை!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை நதியா, மார்டன் உடையில் வெளியிட்ட புகைப்படம் இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் 80ஸ் காலப்பகுதியில் சக நடிகைகளை அழகிலும் நடிப்பிலும் தெறிக்க விட்ட நடிகை தான் நதியா. இவர் இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான“ பூவே பூச்சூடவா” என்ற திரைப்படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து 90களில் பிரபலமாக இருந்த கமல், ரஜினி என பல நடிகர்களுடன் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கைக்குள் சென்று விட்டார்.
இவரின் திரைப்படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. சிறிது காலம் நதியா என்ற நடிகை இருந்தாரே என எல்லோரும் தேடும் அளவிற்கு சினிமாவை விட்டு துரம் சென்று விட்டார்.
இதன் பின்னர் “எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” என்ற திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு அம்மாவாக நடித்து ரீ- என்ட்ரி கொடுத்தார்.
இளமை தோற்றம்
இந்த திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது நதியா 40 வயதை கடந்துள்ளார்.
ஆனாலும் இவரின் அழகு மற்றும் இளமை குறையாமல் 18 வயது நடிகையைப் போல் அப்படியே இருக்கிறது. இதற்கான காரணத்தை பலர் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பார்கள்.
இந்த நிலையிலும் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நதியா, ஒரு பக்கமாக சாய்ந்து ஜீன்ஸ் அணிந்து அதற்கு கருப்பு நிற டாப் அணிந்து கண்ணாடியுடன் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், “ வயதானாலும் உங்கள் அழகும் ஸ்டைலும் மாறாது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.