இதனால் தான் உடல் எடை அதிகரித்தது: தனது உடலை பற்றி உருக்கமாக பேசிய ரவீந்திரன்
இயக்குனர் ரவீந்திரன் தனது உடல் எடை அதிகரித்ததை பற்றி பேட்டி ஒன்றில் பல தகவல்களை கவலையோடு தெரிவித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் ட்ரெண்டாகி வரும் ஜோடிதான் ரவீந்திரன்- மகாலட்சுமி ஜோடி. இவர்கள் இருவரும் திருமணம் முடித்ததில் இருந்து தற்போது வரைக்கும் அதிகம் பேசப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ரவீத்திரன் முதன்முறையாக தன்னுடைய உடல் எடை அதிகரிப்பை பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
உடல் எடை அதிகரித்தற்கு காரணம்
குறித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது உடல் எடை அதிகரிப்பு என்பது வித்தியாசமான ஒன்று கிடையாது. எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம்.
என் உடல் எடைப்பற்றி கேள்வி கேட்பவர்கள் என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வது போல நினைக்கிறார்கள் ஆனால் நான் தான் என்னையும் என் உடல் எடையையும் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு கையில் ஏதோ அலர்ஜி வந்தது அதற்கு சிகிச்சை எடுக்கப்போய் தான் என் எடை அதிகரித்தது. அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்ட போது தான் மாத்திரையில் உள்ள போதை உடம்பில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் செல்களை இல்லாமல் செய்து விட்டது.
இதனால் தான் எடை அதிகரித்தது இது பரம்பரை வியாதி இல்லை. நான் டயட் எடுப்பது இல்லை. இன்று இது சாப்பிட வேண்டாம் என யோசித்து வேண்டாம் என வைத்து விடுவேன்.
100 கிலோ வெயிட்டை தூக்கிக் கொண்டு நடப்பதே கடினம். ஆனால் நான் 200 கிசோ வெயிட்டை தூக்கி கொண்டு சுமந்து நடக்கிறேன். ஒரு நிகழ்வுக்குச் சென்றால் அனைவரும் நாற்காலியில் அமர்ந்து கொள்வார்கள்.
ஆனால் என்னால் அப்படி அமர முடியாது. எங்கு உடைந்துவிடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். அது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. அதை பற்றி நீங்கள் கேட்க வேண்டாம் என சோகமாக பேசியிருக்கிறார்.