வேகத்தை செக் பண்ணு பொண்டாட்டி! மனைவி மகாலட்சுமியின் பதிவிற்கு ரவீந்தர் கொடுத்த பதில்
தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொணட நிலையில் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ரவீந்தரன், மகாலட்சுமி
தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ளவர் ரவீந்தர் சந்திரசேகரன்.
மக்களால் ஃபேட் மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரபல விஜே மற்றும் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
இது தொடர்பான புகைப்படங்களை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் தங்களின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் வைரலாகி இருந்தது.
மேலும், ஏராளமானோர் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்த நிலையில், இவர்களது திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற்றிருந்தது.
இன்ஸ்டாவில் புகைப்படம்
திருமணத்திற்கு பின்னர், தங்களின் திருமண புகைப்படங்களை இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை மகாலட்சுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதன் கேப்ஷனில், "நீங்கள் என் இதயத்தை திருடி விட்டீர்கள். ஆனால், அதை நீங்களே வைத்திருக்க அனுமதிக்கிறேன்" என குறிப்பிடடிருந்தார்.
மனைவியின் கேப்ஷனுக்கு பதிலளித்த ரவீந்தர், "நீ அதை மறந்து விட்டாய் என நான் நினைத்தேன். நான் என்னுடைய இதயத்தை பதிலாக வைத்துள்ளேன். அதன் வேகத்தை சரி பார்த்துக் கொள் பொண்டாட்டி" என குறிப்பிட்டுள்ளார்.