கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்.. விஜே அர்ச்சனாவின் மகள் கொடுத்த பதிலடி!
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
அதன் பின்னர், அவரது யூடியூப் சேனலில் பாத்ரூம் டூர் என வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களிடையே பல விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார்.
இதனிடையே அர்ச்சனாவை மட்டுமின்றி அவரது மகள் ஸாராவையும் சேர்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில், ஸாரா வயதுக்கு மீறிய வகையில் பேசுகிறார், இந்த வயதிலேயே இவ்ளோ attitudeஆ என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
நெட்டிசன்களின் இந்த விமர்சனங்களுக்கு ஸாரா தற்போது பதிலடி கொடுத்து உள்ளார் ஸாரா. அதில், “என்னை பார்க்காமல், என்னிடம் பேசாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்தால் என்ன சொல்வது என தெரியவில்லை. டேக் கேர்” என பதிவிட்டு உள்ளார்.
அதன்பின்னர், நீங்க சீன் போடுறீங்கனு சொல்றாங்களே உண்மையா, ஓவர் மெச்சுர்டு என காட்ட.. என மற்றொரு நெட்டிசன் கேட்க, அதற்கு ஸாரா ‘என்னால முடியல சார், விட்ருங்க’ என பதில் அளித்து உள்ளார்.