ரவீந்தர் திருமணத்திற்கு வனிதாவின் பதிவு! என்ன சொல்லிருக்காங்கனு தெரியுமா?
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்ட நிலையில், நடிகை வனிதா போட்டுள்ள டுவிட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரவீந்தர் மகாலட்சுமி
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் விஜே மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையல், பெரும் வைரலாகியும் வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜே மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவீந்தர் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து ஹனிமூன் சென்று நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ரவீந்தர் பேசுகையில், கல்யாணம் ஆனதுக்கு முன்னாடி மகாவிடம் சேலஞ் பண்ணி சொன்னேன். வனிதா நிச்சயம் எனக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று கூறியுள்ளார்.
வனிதா போட்ட பதிவு
ரவீந்தர் திருமண விஷயத்தில் வனிதா என்ன சொல்ல போகிறார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது வனிதாவின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகின்றது.
தனது ட்விட்டர் பக்கத்தில் ”மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிஸியாக இருக்கிறேன். Karma யாரையும் சும்மா விடாது.
அதற்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த பதிவை ரவீந்தரை குறிப்பிட்டே வனிதா போட்டு இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.
Too happily busy to be bothered about anyone else’s LIFE …. Karma is a B***H … she knows to give it back .. I trust her completely ??
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 5, 2022