ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளனர் தெரியுமா? கணவர் எங்கே என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட மஹா தனியாக புகைப்படம் வெளியிட்ட நிலையில் கணவர் எங்கே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரவீந்தர் மகாலட்சுமி திடீர் திருமணம்
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் விஜே மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையல், பெரும் வைரலாகியும் வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜே மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவீந்தர் காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
திருப்பதியில் நடந்த இந்த திருமணத்திற்கு பின்னர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இந்த காதல் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஹனிமூன் எங்கே?
இந்த நிலையில் திருமணம் முடிந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் செல்லாமல் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்த காதல் தம்பதிகள் ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர்.
மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் இருக்கும் புகைப்படங்களை விஜே மகாலட்சுமி பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
இருப்பினும் ஹனிமூன் சென்ற இடத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்யாமல் தனியாக இருக்கும் புகைப்படத்தை மகாலட்சுமி பதிவு செய்தது ஏன் என்ற கேள்வியையும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் எழுப்பி வருகின்றனர்.