நா சொன்ன நல்லா இருக்காது: 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இமய மலைக்கு சென்ற ரஜினி
4 ஆண்டுகளுக்குப் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் பிறகு இமயமலைக்கு செல்கிறார். அவர் செல்வதற்கு முன் படம் குறித்து சில விடயங்களை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்
தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகாராக அறிமுகமானவர் நடிகர் ரஜினி காந்த்.
அதன் பிறகு தன் இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவிலும் மக்கள் மனதிலும் சூப்பர் ஸ்டார் ராக மாறி இருக்கிறார்.
ரஜினியின் 45 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் அத்தனை சிறப்பு படங்களையும் கொடுத்திருக்கிறார். குடும்ப திரைப்படம், நட்பு, காதல், அன்பு, என பல்வேறு சிறப்பான கதாப்பாத்திரத்திலும் நடித்த அசத்தி இன்றும் மக்கள் மத்தியில் தனியிடம் பிடித்திருக்கிறார்.
இவர் தற்போதும் இளமை மாறாமல் துடிப்புடன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் நாளை ஆகஸ்ட் 10ஆம் திகதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த்
உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் நாளைய தினம் ரஜினி காந்தின் ஜெயிலர் திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று இமயமலை செல்கிறார்.
அந்தவேளையில், செய்தியாளர்களிடம் பேசுகையில், 4 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இமய மலை செல்லவில்லை அதனால் இன்று தான் செல்ல உள்ளேன் என சொல்லியிருக்கிறார்.
பின்னர் ஜெயிலர் திரைப்படம் குறித்து கேட்கையில், படம் எப்படி இருக்கிறது என்று நான் சொன்னால் நல்லா இருக்காது நீங்களே பாத்துட்டு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |