கெட்டப்பழக்கங்களால் ஊறிப்போனவன் நான்: என்னை திருத்தி மாற்றியது இவர் தான்! ரஜினியின் இன்னொரு முகம்
என்னிடம் இருந்த கெட்டப்பழக்கங்ளை இல்லாமல் செய்து அன்பால் என்னை மாற்றியவர் என் மனைவி தான் என சில தரமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்.
ஒய்.ஜி மகேந்திரன் நடித்திருக்கும் சாருகேசி நாடகத்தின் 50ஆவது நாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று சில விடயங்களை பேசியிருப்பார் அதில் அவர் நிறைய விடயங்களை பேசி இருந்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்
தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகாராக அறிமுகமானவர் நடிகர் ரஜினி காந்த்.
அதன் பிறகு தன் இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவிலும் மக்கள் மனதிலும் சூப்பர் ஸ்டார் ராக மாறி இருக்கிறார். ரஜினியின் 45 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் அத்தனை சிறப்பு படங்களையும் கொடுத்திருக்கிறார்.
குடும்ப திரைப்படம், நட்பு, காதல், அன்பு, என பல்வேறு சிறப்பான கதாப்பாத்திரத்திலும் நடித்த அசத்தி இன்றும் மக்கள் மத்தியில் தனியிடம் பிடித்திருக்கிறார்.
மேலும், கருப்பு - வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முதல் நடிகர் என்ற சாதனைக்கு சொந்தகாரரும் இவர்தான்.
நன்றி தெரிவித்த ரஜினி
ஒய்.ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தின் 50ஆவது விழாவில் பேசிய ரஜினி, YGP நாடக குழுவை பாராட்டி விட்டு, ஒய்.ஜி. மகேந்திரனக்கு நன்றித் தெரிவித்திருக்கிறார்.
என் மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததில் நான் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். என் கல்யாணம் நடக்கிறதுக்கே அவர்தான் முக்கிய காரணம் என அவருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்திருந்தார்.
என்னை மாற்றியது இவர்தான்
அந்த விழாவில் தொடர்ந்து பேசிய ரஜினி, இது ஒரு குடும்ப விழா என்பதால் இன்னொரு விடயத்தையும் சொல்கிறேன்.
எனக்கு இப்போது 73 வயதாகிறது. இருந்தாலும் இன்னும் ஆரோக்கியமா இருக்கேன்னா அதுக்கு காரணம் என்னோட மனைவி தான். ஏனெனில் நான் பஸ் கன்டெக்டராக இருக்கும் போது கெட்ட நண்பர்களால் கெட்டப் பழக்கங்களை பழக்கி கொண்டேன்.
அப்போது நான் அதிகமாக சிகரெட் பிடிப்பேன், தினமும் மது அருந்துவேன், தினமும் இருவேளை அசைவ உணவு சாப்பிடுவேன். இந்த மூன்று பழக்கங்களால் சூழ்ந்த என்னை அன்பு மூலம் மாற்றியவர் என் மனைவி மட்டும் தான்.
இந்த பழக்கங்களை விடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் நான் சரியான மருத்துவரை தேர்ந்தேடுத்தேன் அவர் என்னை அன்பால் திருத்தினார். அந்த வைத்தியர் தான் என் மனைவி.
என அந்த நிகழ்வில் தன்னுடைய மறுப்பக்கத்தை நினைவுப்படுத்தி ஒய்.ஜி. மகேந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.