மேடை நாடகத்தில் களமிறங்கும் சூப்பர் ஸ்டார்: நீண்ட நாள் ஆசையை நிறைவேறப்போகிறதாம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நீண்டநாள் ஆசையை தற்போது நிறைவேற்றிக் கொள்ளப்போவதாக ட்டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
ரஜினி
தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகாராக அறிமுகமானவர் நடிகர் ரஜினி காந்த்.
அதன் பிறகு தன் இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவிலும் மக்கள் மனதிலும் சூப்பர் ஸ்டார் ராக மாறி இருக்கிறார்.
ரஜினியின் 45 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் அத்தனை சிறப்பு படங்களையும் கொடுத்திருக்கிறார். குடும்ப திரைப்படம், நட்பு, காதல், அன்பு, என பல்வேறு சிறப்பான கதாப்பாத்திரத்திலும் நடித்த அசத்தி இன்றும் மக்கள் மத்தியில் தனியிடம் பிடித்திருக்கிறார்.
மேலும், கருப்பு - வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முதல் நடிகர் என்ற சாதனைக்கு சொந்தகாரரும் இவர்தான்.
இப்படி வெறும் வெள்ளித்திரையில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தற்போது மேடை நாடகத்தில் ஜொலிக்க வந்திருக்கிறார்.
மேடை நாடகத்தில் நடிக்கவிருக்கும் ரஜினிகாந்த்
இந்நிலையில் நடிகர் ரஜினிக்காந்த் அண்மையில், நீதா அம்பானியின் கலாச்சார மையத்தின் திறப்பு விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் எனப் பிரபலங்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் ரஜினிக்காந்த்தும் கலந்க் கொண்டிருந்தார். இதில் கலந்துக் கொண்டதன் பின் முக்கேஸ் அம்பானிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு இதுபோன்ற அற்புதமான, தேசபக்தியுடனான மனதைக் கவரும் கலை நிகழ்ச்சிகளை நடத்திய நீதா அம்பானியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.
இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான தியேட்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. விரைவில் அது நிறைவேறும் என நம்புகிறேன்”
என தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.