நண்பன் மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றப்போகும் ரஜினி! உருக்கத்துடன் பேசிய வார்த்தைகள்

Rajinikanth Tamil Cinema Death Mayilsamy
By Rinosharai Feb 20, 2023 07:51 AM GMT
Report

நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன் என ரஜினிகாந்த் ஊடகங்களின் முன்னிலையில் தெரிவித்திருக்கிறார்.

மயில்சாமியின் மரணம்

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் திகழ்ந்த மயில்சாமி நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார்.

இவரின் மறைவால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருந்து வருகிறார்கள்.

நண்பன் மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றப்போகும் ரஜினி! உருக்கத்துடன் பேசிய வார்த்தைகள் | Rajinikanth Promises Fulfill Mayilswamy Last Wish

திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவருடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று காலை 10 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் நடைபெற்றுள்ளது.

நண்பன் மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றப்போகும் ரஜினி! உருக்கத்துடன் பேசிய வார்த்தைகள் | Rajinikanth Promises Fulfill Mayilswamy Last Wish

மரணத்திற்கான காரணம்

தீவிர சிவபக்தரான மயில்சாமி சென்னை கேளம்பாக்கம் சிவன் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்றிருக்கிறார்.

சிவ வழிபாட்டை முடித்து விட்ட பிறகு மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்திருக்கிறார் என்று வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.


கடைசி ஆசை

நண்பன் மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றப்போகும் ரஜினி! உருக்கத்துடன் பேசிய வார்த்தைகள் | Rajinikanth Promises Fulfill Mayilswamy Last Wish

கோவிலில் அவருடன் பிரபல இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணி இருந்தார், நேற்று மயில்சுவாமி கோவிலில் அவருடன் பேசிய கடைசி உரையாடலைப் பகிர்ந்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ஸ் சிவமணி, நடிகர் மயில்சாமி பல ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கு சென்று வந்த மகா சிவராத்திரிக்கு இந்த ஆண்டு செல்லவில்லை.

கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் செல்லுமாறு கூறி, விதிய சிவன் பாடல்களைப் பாடி இருவரும் சிவனின் அருளைப் பெற்றோம். அதிகாலை 3 மணியளவில் மயில்சாமி வீட்டுக்கு புறப்பட்டார். அந்த நேரத்தில் மயில்சாமிக்கு நன்றி தெரிவித்து குரல் செய்தியும் அனுப்பினேன்.

திடீரென்று, 5 மணியளவில், அவரது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, எனக்கு அவர் இறந்த செய்தி கிடைத்தது.

நண்பன் மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றப்போகும் ரஜினி! உருக்கத்துடன் பேசிய வார்த்தைகள் | Rajinikanth Promises Fulfill Mayilswamy Last Wish

அப்போது மயில்சாமி தன்னிடம் விவேக் சாரை இந்தக் கோவிலுக்கு அழைத்து வந்தேன் என்று சிவமணி கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து இங்குள்ள லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை என சிவமணியிடம் தெரிவித்திருக்கிறார்.

கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன்

இந்நிலையில், மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ரஜினி காந்த் ஊடகங்களிடம் பேசுகையில், மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர்.

அவரை 23, 24 வயது இருக்கும்போதே எனக்கு தெரியும். மிமிக்கிரி ஆர்டிஸ்டா இருந்து அதற்கு பிறகு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்தார்.

நண்பன் மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றப்போகும் ரஜினி! உருக்கத்துடன் பேசிய வார்த்தைகள் | Rajinikanth Promises Fulfill Mayilswamy Last Wish

அவர் ஒரு அதி தீவிர சிவபக்தன் மேலும் எம்.ஜி.ஆரின் ரசிகனுமாவார். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வோம். அவர் அதிகமாக சினிமாவைப் பற்றி பேசமாட்டார். மாறாக சிவன் மற்றும் எம்.ஜி.ஆர் பற்றியே நிறைய பேசுவார்.

மேலும், சினிமா துறையில் இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இழப்பு பேரிழப்பு. ஒன்று விவேக், மற்றொன்று மயில்சாமி. மயில்சாமியின் இழப்பானது சிவனின் கணக்கு தனக்கு உகந்த நாளின் தன் தீவிர பக்தனை அழைத்துக்கொண்டார்.

நண்பன் மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றப்போகும் ரஜினி! உருக்கத்துடன் பேசிய வார்த்தைகள் | Rajinikanth Promises Fulfill Mayilswamy Last Wish

அவர் உயிரிழப்பதற்கு முன்பு கூட சிவன் கோவில் நிகழ்ச்சியில் ரஜினி பாலபிஷேகம் செய்வதை நான் பார்க்க வேண்டும் என்று மயில்சாமி, டிரம்ஸ் சிவமணியிடம் சொல்லியிருக்கிறார்.

கட்டாயம் சிவமணியிடம் இதைபற்றி பேசிவிட்டு மயில்சாமியின் கடைசி ஆசையை நான் நிறைவேற்றுவேன் என கலக்கத்துடன் தெரிவித்தார்.       


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US