தனுஷ் 150 கோடிக்கு வீடு கட்ட காரணம் என்ன? ரஜினி வீட்டில் நடந்த அவமானம்
நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் 150 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டுவதற்கு காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்
போயஸ் கார்டனில் தனுஷின் புதிய இல்லத்தின் புதுமனை சிவராத்திரி தினத்தன்று சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனது சமூக வலைத்தளத்தில் தனுஷுடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் அறிமுகப்படுத்திய நடிகர் தனுஷ் பல தமிழ்ப் படங்களில் நடித்து சிறந்த நடிகராக தன்னை நிரூபித்துள்ளார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் தனுஷு க்கு தமிழகத்தில் ரசிகர் பட்டாளம் அதிகம். தனுஷின் திருடா திருடி படத்தை இயக்கிய சுப்ரமணிய சிவா அவரது ரசிகர் மன்றத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ள தனுஷ், நடிப்பையும் தாண்டி இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையினை கொண்டுள்ளார்.
போயஸ் கார்டன் வீடு
சிவராத்திரியான கடந்த 18ம் தேதி சுமார் 150 கோடி செலவில் கட்டப்பட்ட தனுஷின் புதிய வீட்டின் புகுமனை புகுவிழாவிற்கு சுப்பிரமணிய சிவாவும் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அவர் தனுஷுடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு டிரெண்டிங் ஆகியுள்ளது.
போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டின் அருகே பிப்ரவரி 2021ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு வீடு கட்ட தொடங்கியுள்ளனர். வலைப்பேச்சு இணைய தளத்தின் தகவல் படி இந்த வீடு சுமார் 19000 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடு கட்ட கிட்டத்தட்ட 150 கோடி செலவாகியிருப்பதாகவும், சில பொருட்கள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து தனுஷ் வீட்டை இன்டர்நேஷ்னல் அளவில் கட்டியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பிரம்மாண்ட வீட்டை கட்ட காரணம் என்ன?
நடிகர் தனுஷ் இந்த பிரம்மாண்ட வீட்டை தனது தாய், தந்தைக்கே பரிசாக கொடுத்துள்ளார். வீட்டின் கிரகபிரவேசத்தினை கூட மிக எளிமையாகவே நடத்தியுள்ளார்.
இந்நிலையில் போயஸ் தோட்டத்தில் அமைந்திருக்கும் ரஜினியின் வீட்டை விட பல வசதிகளுடன் 150 கோடி செலவு செய்து ஏன் தனுஷ் இந்த வீட்டை கட்டியுள்ளார் என்று பலரிடையே கேள்வி எழுந்துள்ளது.
இதற்கான பின்னணி குறித்து, தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தன்னுடைய மகளை தனுஷ் திருமணம் செய்து கொண்ட பின்னர், தனுஷின் பெற்றோரை தன்னுடைய குடும்பத்துடன் சரிசமமாக நடத்தாமல் எப்போதுமே, இரண்டாம் தரத்திலேயே தான் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் நடத்தினார்களாம்.
இதற்கு ஐஸ்வர்யாவும் உடந்தையாக இருந்ததாகவும், இந்த காரணத்தினால் ரஜினி தனுஷ் இடையே சில மனஸ்தாபமும் இருந்ததாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாகவே ரஜினியின் வீட்டை விட பிரம்மாண்டமாக அதே இடத்தில் வீடு கட்டி தனது பெற்றோரை அதில் வாழ வைக்க வேண்டும் என்ற வைரலாக்கியத்துடனே தனுஷ் இத்தனை கோடி செலவு செய்து வீட்டினை கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.