19 வயதில் ஏற்பட்ட வலி... 60 ஆண்டுகளாக வெட்டப்படாத பாட்டியின் 6 மீட்டர் நீள முடி
வியட்நாமைச் சேர்ந்த 83 வயது பாட்டி ஒருவர் நீண்டு ஆண்டுகளாக முடியை வெட்டாமல் 6 மீற்றர் நீளத்திற்கு வளர்த்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
60 ஆண்டுகளாக முடிவெட்டாத மூதாட்டி
வியட்நாமைச் சேர்ந்த நெஹூயென் தி தின் என்ற பெண், தனது 19 வயதில் ஏற்பட்ட தலைவலிக்கு மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
ஆனால் அவரது முடி வளரத் தொடங்கிய போது தலைவலியும் படிப்படியாக குறைந்ததாக கூறப்படுகின்றது. இதனால் தனது முடியை வெட்டாமல் 60 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வருகின்றார்.

முடியை வெட்டாமல் இருப்பது மட்டுமின்றி அதனை அலசாமலும் வாழ்ந்து வருகின்றார். தற்போது இவரது முடி 6 மீற்றர் நீளத்திற்கு வளர்ந்துள்ளது.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே?
பாம்பைப் போன்ற தோற்றத்தில் பெரிய சடைமுடிச் சுருளாக மாறியுள்ளது. தனது இளமைப்பருத்தில் ஏற்பட்ட தலைவலிக்காக இத்தனை ஆண்டுகளாக முடியை வெட்டாமல் காலத்தினை கழித்த பாட்டி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |