150 கோடி செலவில் கட்டிய வீட்டை யாருக்கு பரிசாக கொடுத்தார் தனுஷ்? பிரம்மிப்பில் ரசிகர்கள்
தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகரான தனுஷ் தனது புதிய இல்லத்தினை கட்டிமுடித்து, அதனை பரிசாக தனது பெற்றோருக்கு கொடுத்துள்ளார்.
நடிகர் தனுஷ்
போயஸ் கார்டனில் தனுஷின் புதிய இல்லத்தின் புதுமனை சிவராத்திரி தினத்தன்று சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனது சமூக வலைத்தளத்தில் தனுஷுடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன் அறிமுகப்படுத்திய நடிகர் தனுஷ் பல தமிழ்ப் படங்களில் நடித்து சிறந்த நடிகராக தன்னை நிரூபித்துள்ளார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் தனுஷு க்கு தமிழகத்தில் ரசிகர் பட்டாளம் அதிகம். தனுஷின் திருடா திருடி படத்தை இயக்கிய சுப்ரமணிய சிவா அவரது ரசிகர் மன்றத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
சிவராத்திரியான கடந்த சனிக்கிழமை சுமார் 150 கோடி செலவில் கட்டப்பட்ட தனுஷின் புதிய வீட்டின் புகுமனை புகுவிழாவிற்கு சுப்பிரமணிய சிவாவும் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அவர் தனுஷுடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு டிரெண்டிங் ஆகியுள்ளது.
150 கோடியில் கட்டப்பட்ட வீடு
போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டின் அருகே பிப்ரவரி 2021ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு வீடு கட்ட தொடங்கியுள்ளனர். வலைப்பேச்சு இணைய தளத்தின் தகவல் படி இந்த வீடு சுமார் 19000 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு கட்ட கிட்டத்தட்ட 150 கோடி செலவாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சில பொருட்கள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து தனுஷ் வீட்டை இன்டர்நேஷ்னல் அளவில் கட்டியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
பெற்றோருக்கு அளித்த பரிசு
இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் தனுஷ் ஆசையாக கட்டிய இந்த வீட்டை தன்னுடைய அப்பா அம்மாவிற்கு கிப்டாக அளித்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல்தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகளை புதிய வீட்டில் தனுஷ் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தனுஷ் ரசிகர் மன்றத்தை சார்ந்த ராஜா என்பவர் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை அவர்களது குடும்பத்தினருடன் தனுஷ் அழைத்து புகைப்படமும் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களை வெளியிட்டு தனுஷ் ரசிகர் ராஜா, "மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம். நன்றி சார்" என ட்வீட் செய்துள்ளார்.