150 கோடிக்கு தனுஷ் கட்டிய பிரம்மாண்ட வீடு! வெளியான அசத்தல் புகைப்படம்
தமிழ் திரைத்துறையின் முக்கியமான நடிகரான தனுஷ் தனது புதிய இல்லத்தில் நேற்று குடியேறியுள்ளார்.
போயஸ் கார்டனில் தனுஷின் புதிய இல்லத்தின் புதுமனை சிவராத்திரி தினத்தன்று சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் சுப்பிரமணிய சிவா தனது சமூக வலைத்தளத்தில் தனுஷுடன் எடுத்த புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார்.
நடிகர் தனுஷ்
இயக்குனர் செல்வராகவன் அறிமுகப்படுத்திய நடிகர் தனுஷ் பல தமிழ்ப் படங்களில் நடித்து சிறந்த நடிகராக தன்னை நிரூபித்துள்ளார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் தனுஷு க்கு தமிழகத்தில் ரசிகர் பட்டாளம் அதிகம். தனுஷின் திருடா திருடி படத்தை இயக்கிய சுப்ரமணிய சிவா அவரது ரசிகர் மன்றத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
சிவராத்திரியான கடந்த சனிக்கிழமை சுமார் 150 கோடி செலவில் கட்டப்பட்ட தனுஷின் புதிய வீட்டின் புகுமனை புகுவிழாவிற்கு சுப்பிரமணிய சிவாவும் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அவர் தனுஷுடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு டிரெண்டிங் ஆகியுள்ளது.
150 கோடியில் கட்டப்பட்ட வீடு
போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டின் அருகே பிப்ரவரி 2021ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டு வீடு கட்ட தொடங்கியுள்ளனர். வலைப்பேச்சு இணைய தளத்தின் தகவல் படி இந்த வீடு சுமார் 19000 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு கட்ட கிட்டத்தட்ட 150 கோடி செலவாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
4 தளம் கொண்ட இந்த வீட்டை, ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நிகரான வகையில் தனுஷ் டிசைன் செய்துள்ளாராம்.
பிரமாண்ட நீச்சல் குளம், ஒரு ஆடம்பர உட்புற விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், ஹோம் தியேட்டர், குடும்பத்தினர் அனைவருக்கும் சர்வதேச அளவில் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டு தனி அறை உருவாக்கப்பட்டு உள்ளதாம்.
சில பொருட்கள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து தனுஷ் வீட்டை இன்டர்நேஷ்னல் அளவில் கட்டியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
புதிய தோற்றத்தில் தனுஷ்
தற்போது கேப்டன் மில்லர் எனும் படத்தில் நடிக்கும் தனுஷ் நீளமான முடி மற்றும் தாடியுடன் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கிறார். புதுமனை புகு விழாவில் நீல நிற குர்தாவில் தனது தாய், தந்தை மற்றும் சுப்ரமணிய சிவாவுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
தனுஷின் வாத்தி திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.