விவாகரத்து சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த மகாலட்சுமி: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
விவாகரத்து சர்ச்சையை கிளப்பியவர்களுக்காக மகாலட்சுமி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
ரவீந்தர்-மகாலட்சுமி
தற்போது சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அடிப்படும் பெயர்தான் ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதிகளின் பெயர் தான்.
தொலைக்காட்சிகளில் வி.ஜே வாக பணிபுரிந்து வந்த மகாலட்சுமி நாளடைவில் சீரியலில் பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.
இவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்த வேலையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் எளிமையான முறையில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமத்திற்குப் பிறகு அடிக்கடி இருவரும் எங்கேயாவது சென்று ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
மகாலட்சுமியின் பதிவு
ரவீந்திரன் அண்மையில் தனியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் சோகமாக ஒரு தலைப்பையும் பதிவிட்டிருந்தார். இதனால் ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதியினர் விவாகரத்து செய்துக் கொண்டார்கள் என தகவல்கள் பரவி வந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார். அதில்,
டேய் "புருஷா" இன்ஸ்டாகிராமில் உனது தனிப் படத்தைப் பதிவேற்ற வேண்டாம் என்று எத்தனை முறை கூறியிருக்கிறாய். மீண்டும் முழு சமூக ஊடகங்களும் பிரிந்துவிட்டதாகச் சொல்கிறது.. மவனே இனிமேல் இந்தத் தவறை மீண்டும் செய்... எனக்கு பிடித்த சேமியா உப்மா 3 வேளை உணவாக எப்போதும் கிடைக்கும்!
யூடியூப் கிசுகிசு குழுவுக்கு என் மைண்ட் வாய்ஸ் - இன்னும்டா நாங்க ட்ரெண்ட்...இதுக்கு இல்லையாடா ஒரு முடிவு... என நக்கலாக பதிவிட்டிருக்கிறார்.