தனது திட்டத்தை தவிடுபொடியாக்கிய மகாலட்சுமி! காரணம் நயன்தாரா தான்: ரவீந்தர் பகீர் குற்றச்சாட்டு
சமீபத்தில் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி மாறியதற்கு நயன்தாரா தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ரவீந்தர் மகாலட்சுமி
சில தினங்கள் முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை, லிப்ரா புரொடக்ஷன் தயாரி்ப்பாளர் ரவீந்தர் திருமணம் செய்துள்ளார்.
தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வரும் இவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், பலரும் இவர்களை கிண்டல் செய்து வரும் நிலையில், தங்களது ஹனிமூனை வெளிநாடுக்கு செல்லாமல் மகாபலிபுரத்திலேயே கொண்டாடி வருகின்றனர்.
நயன்தாராவை குற்றம் சாட்டிய ரவீந்தர்
இந்நிலையில் இருவரும் இணைந்து பேட்டியளித்து வரும் நிலையில், இதுவரை மகாலக்ஷ்மிக்கு எந்த கிஃப்ட்டும் வாங்கி கொடுக்கவில்லை என்று கூறிய ரவீந்தர், மகாலக்ஷ்மியை தனது மனைவியாக்கிய பிறகுதான் அவருக்கு கிஃப்ட் கொடுக்க வேண்டும் முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் திருமணத்தின் போது தாலி செயினாகதான் போட வேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்ததாகவும் கூறிய ரவீந்தர், மகாலக்ஷ்மிதான் தொங்க தொங்க மஞ்சள் கயிறு கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வீட்டில் என்னுடைய அம்மா கூட மஞ்சக்கயிறு கட்டி அதை பராமரிப்பது எல்லாம் அவ்வளவு எளிது கிடையாது தினமும் அதில் மஞ்சள் தேய்க்க வேண்டும் அதனால் செயின் வாங்கி போட்டுக்கொள் என்றார்கள்.
ஆனாலும் இவள் கேட்கவில்லை அவளுக்கு தாலியை விட மஞ்சக்கயிறு கட்டி கழுத்தில் தொங்கவிட வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. அதை நான் செய்து விட்டேன் என்று ரவீந்தர் கூறியிருக்கிறார்.
இதற்கெல்லாம் காரணம் நயன்தாரா மேடம்தான் என்று தெரிவித்துள்ள ரவீந்தர், அவங்கதான் அப்படி போட்டிருக்காங்க என்றும் கூறியுள்ளார்.
உடனே இடையே குறுக்கிட்ட மகாலட்சுமி நான் கடந்த ஆண்டே கூறிவிட்டதாக கூறியுள்ளார்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...