கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் ஆபத்தா?
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்று நிறைய பழங்கள் சாப்பிடுவார்கள்.
அதிலும் பெரியவர்கள் சொல்வார்கள் சில பழங்களை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள். அதிலும் அவர்களுக்கென்று ஒரு பட்டியல் கொடுத்திருப்பார்கள் அதில் முதலாதாக பப்பாளிப் பழம் சாப்பிட கூடாது என்பது தான் இருக்கும்.
பப்பாளி பழத்தில் அதிகளவான நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்திருக்கிறது. மேலும், பப்பாளிப் பழத்தை சாப்பிட்டால் இயற்கையாகவே பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
அப்படி பல நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கும் பப்பாளி பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாமா? கூடாதா? என்ற ஒரு கேள்வி எல்லோருக்கும் இருக்கும். உங்கள் கேள்விகளுக்கு பதிலாக அமைவது தான் இந்த பதிவு.
கர்ப்பிணிப் பெண்களுக்கு பப்பாளி...
1. கர்ப்பிணிப் பெண்கள் தன் கர்ப்ப காலத்தில் நன்றாக பழுத்த பப்பாளிப் பழத்தை சாப்பிடுவதால் எவ்வித சிக்கல்களும் இல்லை எனெனில் பழுத்த பப்பாளியில் வைட்டமின் ஏ, பி, சி, பீடா கரோடின், ஆன்ட்டி ஆக்சிடென்ட், பொட்டாசியம் போன்ற சத்ததுக்கள் நிறைந்திருக்கிறது.
2. கர்ப்பிணிகளுக்கு தேவையான சத்துகளில் ஒன்று தான் இந்த போலிக் அமிலம். இது வயிற்றில் இருக்கும் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
3. குழந்தைப் பெற்றப் பிறகு பெண்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் பால் உற்பத்தி அதிகமாகும்.
4. பழுக்காத பப்பாளிழய சாப்பிட்டால் கர்ப்பப்பையில் பிடிப்பு ஏற்பட்டு குறைப்பிரசவம் ஏற்படும்.
5. மேலும், பழுத்த பப்பாளியை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
6. கர்ப்பம் சார்ந்த சிக்கல்களை சந்திந்த பெண்கள் பப்பாளியைத் தவிர்ப்பது நல்லது.