சக்திவாய்ந்த பப்பாளி பழத்தை யார் சாப்பிடலாம்? அதிகம் சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் உண்டாகும்?
"ஏழைகளின் கனி" என்று அழைக்கப்படும் பப்பாளிப் பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன.
பலவகையான ஊட்டச்சத்துக்களை கொண்ட பழங்களில் பப்பாளி முதன்மையானது.
மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிலுமே பப்பாளியின் பங்கு மகத்தானது. அது மட்டும் இன்று வருடம் முழுவதும் விலை குறைவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி.
மேலும் பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் பழமும் கூட. அத்தகைய பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.
இதனால் அப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
சத்துக்கள்
மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது.
இந்த சத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது. பப்பாளியில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை இருப்பதோடு, கனிமச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பல அதிகமாக உள்ளன.
18 வகையான சத்துக்கள் கொண்ட ஒரே பழம் பப்பாளியாகும்.
உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளி பழத்தை சாப்பிடுவது சிறந்த நன்மையை தரும்.
200மி.லி பப்பாளிப் பழக்கூழில்...
- புரதம் - 1.52 கிராம்
- கொழுப்பு - 0.25 கிராம்
- தாதுக்கள் - 1.27 கிராம்
- நார்ச்சத்து - 2 கிராம்
- மாவுப்பொருள் - 37.88 கிராம் சத்துக்கள் உள்ளது.
நன்மைகள்
புற்றுநோயை எதிர்க்கும் - பப்பாளி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்த்துப் போராடி, உடலை புற்றுநோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும். குறிப்பாக பப்பாளி கணையம் மற்றும் மார்பக புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கிறதாம்.
வைட்டமின் ஏ குறைபாடு - வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண்டிப்பாக பப்பாளி பழம் உண்ண வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது.
மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும் - பப்பாளி பழத்தில் உள்ள போலிக் அமிலம் வடிவில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. பாப்பாளி சாப்பிட்டால் மெட்டபாலிசம் ஊக்குவிக்கப்படும்.
மலச்சிக்கல் - பப்பாளி மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
செரிமான பாதை பிரச்சனை - நார்ச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டால், அவை செரிமான பாதையில் சில நேரம் சுலபமாக செல்லாது. இப்படி அடைப்பட்டிருக்கும் பொருட்கள், தேற்று தன்மையை ஏற்படுத்திவிடும். ஆகவே அதனை பப்பாளி பழம் சிறப்பாக சரிசெய்யும். உதாரணத்திற்கு, பெருங்குடலில் சளி அடைத்து இருந்தால், அதனை பப்பாளி ஜூஸ் நீக்கி விடும்.
எடை குறைக்க உதவும் - உடல் எடையை குறைக்க குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பப்பாளியை சாப்பிடுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.
பல்வேறு வலிகளுக்கு நிவாரணி - கீல்வாதம், எலும்புத்துளை நோய் அல்லது வேறு ஏதாவது வலிகளுக்கும் பப்பாளியை உண்ணலாம். இது வலியை குறைக்க உதவும். மேலும் அழற்சியை எதிர்க்கும் குணத்தை கொண்டுள்ளதால், வேகமாக ஆற வைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது.
சளியை போக்கும் - அடிக்கடி சளி பிடித்து கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே உணவில் பப்பாளியை சேர்த்துக் கொண்டால், சளி மற்றும் இருமலை நீக்க போராடும். மேலும் பப்பாளி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அது அதிகரிக்கும்.
சிறுநீரக கோளாறு - பப்பாளி விதைகளின் பயன்களை பற்றி பல பேருக்கு தெரிவதில்லை. ஜெல்லி போன்ற தோற்றத்தை கொண்ட இதன் விதைகளில் பாக்டீரியாவை அழிக்கும் குணம் உள்ளது. சிறுநீரக கோளாறு, ஈரலை சுத்தப்படுத்துதல் மற்றும் நச்சுத் தன்மையை நீக்குதல் போன்றவற்றிற்கு உறுதுணையாக இருக்கும்.
மலட்டுத்தன்மை - பப்பாளி விதைகளை வெந்நீரில் போட்டு குடித்தால், குடும்ப கட்டுப்பாட்டிற்கு உதவி புரியும் என்று சில பேர் நம்புகின்றனர். உங்களின் சொந்த இடர்பாட்டில் இதனை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.
சருமத்திற்கு உதவும் பப்பாளி
பப்பாளி ஒருவரது உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கிறது என்பதை இதுவரை பார்த்தோம். ஆனால் அது நமது சருமத்திற்கும் பல்வேறு நன்மைகள் அளிப்பது பலருக்கு தெரியாத விஷயமாக இருக்கலாம்.
இந்த பழம் சருமத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவுகிறது. வைட்டமின் சியை இது அதிகமாகக் கொண்டிருப்பதால் பீட்டா கரோட்டீன் மற்றும் லைகோபீன் போன்ற கரோட்டினாய்டுகளை கொண்டுள்ளது.
இவை இரண்டும் ஒன்றாக சேரும்போது அவை நமது சருமத்திற்கு பல நன்மைகளை செய்கின்றன.
மேலும் சருமத்தில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்சனைகளில் இருந்தும் இது பாதுக்காப்பு அளிக்கிறது.
இதன் விளைவாக வயதாவதற்கு முன்பே முகங்களில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்ய இவை உதவுகின்றன. நீண்ட நாட்களுக்கு சருமம் இளமையுடன் இருப்பதற்கு பப்பாளி உதவுகிறது.
பப்பாளியில் வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தை சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளில் இருந்து காக்க உதவுகிறது.
எனவே நீங்கள் இளமையாக இருக்கவும் உங்கள் சருமத்தை மிளிர வைக்கவும் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுங்கள்.
பப்பாளி பழத்தின் பக்க விளைவுகள்
எல்லா வகை உணவிலும் நன்மையோடு சின்ன சின்ன பக்க விளைவுகளும் இருக்கத் தான் செய்யும்.
அப்படி பப்பாளி பழத்தில் நிறைய சத்துக்கள் இருந்தாலும் கீழ்வரும் சிறுசிறு பக்க விளைவுகளும் இருக்கதடதான் செய்கின்றன.
அதனால் அளவோடும் கவனத்தோடும் சாப்பிட வேண்டியது அவசியம். பப்பாளி பழத்தினை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கருச்சிதைவு - கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. பப்பாளி பழத்தின் விதைகள் கருக்கலைப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. கருப்பை சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்தும். அதனால் கூடுமானவரை பப்பாளியில் இருந்து கர்ப்பிணிகள் தள்ளி இருப்பது நல்லது.
ரத்த சர்க்கரை - பப்பாளியை அதிகமாக உண்ணும் போது நமது உணவுக்குழாய் தடைபட வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் தினமும் அதிகமாக பப்பாளி பழத்தை சாப்பிடுவதை தவிருங்கள்.
சர்க்கரை அளவு குறைத்து விடுகிறது பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. குறைக்கிறது. இதற்கிடையில் நீங்கள் இரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வந்தால் இது மிகுந்த தீங்கை விளைவிக்கும்.
அழற்சி - நன்கு முழுமையாகப் பழுக்காத பப்பாளியில் உள்ள பால் போன்ற தன்மை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே முடிந்த வரை பழுக்காத பப்பாளியை சாப்பிடுவதை தவிருங்கள்.
உயிரணுக்கள் - பப்பாளி விதைகள் ஆண்களின் ஆண்மை தன்மையைப் பாதிக்கிறது. இதனால் உயிரணுக்களின் எண்ணிக்கையும் குறைத்து விடுகிறது. அதற்காக மலட்டுத் தன்மை ஏற்படும் என்கிற அளவுக்கு யோசிக்கத் தேவையில்லை.
அதேசமயம் பப்பாளியை சாப்பிடவே கூடாது என்ற பொருளும் அல்ல.
வயிற்றுக் கோளாறு - அதிகமாக பப்பாளி சாப்பிடுவதால் வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பப்பாளி பழத்தில் நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன.
இதனால் வயிற்று பிடிப்புகள், வயிறு வீக்கம், குமட்டல் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
மருந்து எடுப்பவர்கள் - பப்பாளி பழத்தில் உள்ள பால் போன்ற தன்மை இரத்தத்தை நீர்க்கச் செய்ய வைக்கும் தன்மை கொண்டவை.
பிளட் தின்னர் எடுத்துக் கொள்பவர்களும் அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் நபர்கள் பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வதை தவிருங்கள். ஹீமோபிலியா மற்றும் த்ரோம்போசிஸ் பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிருங்கள்.
இதய துடிப்பை மெதுவாக்குகிறது - இதயக் கோளாறு உடையவர்கள் பப்பாளி பழத்தைச் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதிலுள்ள பப்பேன் உங்க இதய துடிப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே உங்களுக்கு இதய பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்ற பிறகு பப்பாளியை எடுத்துக் கொள்ளுங்கள்.
டயேரியா - பப்பாளியில் பென்சில் ஐசோதியோசயனேட் என்று நச்சுத் தன்மையை உண்டாக்கும் பொருட்கள் உள்ளன.
நம் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பப்பாளியின் தோல் பகுதியை சீவி விட்டுதான் சாப்பிட வேண்டும்.
முக்கிய குறிப்பு
பப்பாளி பழத்தின் நன்மை, தீமைகளை இப்பதிவில் பார்த்திருப்பீர்கள். உங்களது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இனிய பழமாகிய பப்பாளிப்பழம் நிச்சயம் உதவும்.
எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஏழைகளின் பங்காளியான இந்த பப்பாளி பல ஆரோக்கிய நலன்களை நமக்கு அள்ளி வழங்குகிறது. எனவே பப்பாளியை இன்றிலிருந்தாவது அளவாக சாப்பிடத் தொடங்குங்கள்.