கர்ப்பிணி பெண்கள் சிக்கன் சாப்பிடலாமா? பலரது கேள்விக்கு பதில் இதோ
இன்றைய காலத்தில் அசைவ உணவுப் பிரியர்களின் உணவுப்பட்டியலில் சிக்கன் தான் முதலிடம் பிடித்து வருகின்றது. ஊட்டச்சத்து அதிகம் கொண்டிருந்த சிக்கனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் எழுகின்றது.
கர்ப்பிணி பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பிராய்லர் கோழிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக் கோழி வகைகளை சாப்பிடுவது மிகவும் சிறந்ததாகும்.
கர்ப்பிணிகள் சிக்கன் சாப்பிடலாமா?
சிக்கனில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கின்றது.
இதே போன்று உடம்பில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும் இரும்புச்சத்து இதில் காணப்படுகின்றது. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, ஜிங்க், தாதுக்கள் ஆகியவை காணப்படுவதால் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு அவசியமாக இருக்கின்றது.
சிக்கனின் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சிக்கனின் சால்மோனெல்ல வைரஸ் அதிகமாக காணப்படுவதால், நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியில் சோடியம் அதிகமாக இருக்கும். இது கர்ப்பிணிகளுக்கு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆகவே அந்த மாதிரி இறைச்சியை தவிர்க்க வேண்டும்.