கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள்

Pregnancy
By Manchu May 13, 2022 12:53 AM GMT
Manchu

Manchu

Report

பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது.

பிரசவ காலம்

பிரசவம் என்பதே கொஞ்சம் கவனமாக அணுக வேண்டிய ஒரு விஷயம் தான். கர்ப்ப காலத்தின் சிரமங்கள் முடிந்து அதன் உச்சத்தை எட்டும் கணங்கள் தான் பிரசவ வலி என்பது.

இதுவரை உங்கள் கருப்பையில் பத்திரமாக இருந்த உங்கள் குழந்தை வெளியேறும் நேரம் வந்து விட்டது என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காக உடலில் ஒரு சில அறிகுறிகள் ஏற்படுகின்றன.

பிரசவ அனுபவம் என்பது பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. சிலருக்கு மிகவும் கஷ்டமாகவும், சில பெண்களுக்கு மிகவும் சுலபமாகவும் பிரசவம் ஆகின்றது.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

நீரிழிவு நோயாளிகள் இந்த காய்களை சாப்பிட கூடாது! ஏன் தெரியுமா? 

ஏழு மாதங்களுக்கு மேல் ஜாக்கிரதை

7 மாதங்கள் தொடங்கியதில் இருந்தே பல்வேறு விதமான பாதுகாப்புடன் நீங்கள் இருக்க வேண்டும்.

பிரசவ நேரம் குறித்துக் கொடுத்த பின்னர் அதில் இருந்து 1 வாரம் முன்னதாகவோ பின்னதாகவோ பிரசவம் நிகழக் கூடும் என்பது மருத்துவர்களின் கணிப்பு.

60 சதவிகித பெண்களுக்கு குறிப்பிடப்பட்ட தேதியிலோ அதற்கு முன்னதாகவோ பிரசவம் நடந்து விடுகிறது.

கர்ப்பமடைந்த 37வது வாரம் முதல் 42வது வாரத்திற்குள் பிரசவ நேரம் என்பது நிகழ்கிறது. இதற்கு முன் ஏற்படும் பிரசவங்கள் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.

எடையை வேகமாக குறைக்க ஆசையா? 

இந்த நாட்கள் தாண்டி ஏற்படும் பிரசவ வலி என்பது தாமதமான பிரசவ வலி என்று கூறப்படுகிறது. இந்த நேரங்களில் மருத்துவர் பிரசவ வலி ஏற்படுத்தும் செயற்கை முறைகளை மருத்துவர்கள் தெரிவு செய்வார்கள்.

பிரசவ காலத்தின் போது ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து பிரசவ வலி ஏற்படுவதையும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்? பல நோய்க்கு நிரந்தர தீர்வு 

கருப்பையிலிருந்து குழந்தை இறங்கும்

உங்கள் இடுப்பு பகுதியில் இருந்து குழந்தை தலை கீழே இறங்கி இருக்கும். பெரியவர்கள் இதனை சுலபமாகக் கண்டறிவார்கள்.

உங்கள் வயிறு கீழ் நோக்கி இறங்கி இருக்கும். இதனால் உங்கள் இதயப் பகுதி மற்றும் வயிற்று பகுதியின் அழுத்தம் குறையும்.

அதிகமாகவும் சுலபமாகவும் உங்களால் உணவு எடுத்துக் கொள்ள முடியும். நிறைய பெண்களுக்கு பிரசவ நேரத்திற்கு 2 வாரத்திற்கு முன்பாகவே இது நிகழ்ந்து விடும். ஒரு சில பெண்களுக்கோ அதன் அறிகுறி தெரியாமல் போகலாம்.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

மூன்றே நாட்களில் வயிற்றுப் புழுக்களை அழிக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ் 

அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்

சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதல் ஏற்படுவதற்கு குழந்தையின் தலை இடுப்புக்கு கீழே இறங்கியது காரணமாக இருக்கலாம்.

குழந்தை தலையின் தாழ்வு நிலை சிறுநீர்ப்பையில் இன்னும் அதிக அழுத்தத்தை அளிக்கிறது, எனவே பிரசவத்தை நெருங்கும் பல பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை உணரக்கூடும்.

குழந்தை வயிற்றிலிருந்து இடுப்பிற்கு இறங்கும் போது, ​கீழே இருந்த உதரவிதானத்தில் குறைந்த அழுத்தம் இருப்பதால் சுவாசம் எளிதாகிவிடும்

உடலில் வயிற்றையும் நெஞ்சையும் இரண்டாகப் பிரிப்பது 'உதரவிதானம்' (Diaphragm) என்னும் தடிமனான சவ்வு ஆகும்.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

பெருங்குடல் புற்றுநோய் வர காரணம் என்ன? அறிகுறிகளும் தடுக்கும் வழிமுறைகளும்! 

கருப்பை வாய் அகலமாகும்

குழந்தை முழுமையாக வெளியேறுவதற்கு வசதியாக பெண்ணின் கருப்பை வாயானது தன்னை அகலப்படுத்தும்.

இதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது என்பதை அறிய முடியும்.

பெரும்பாலும் இதனை மருத்துவ பரிசோதனை மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

பிரசவ நேரத்திற்கு 10 நாட்கள் முன்பிருந்தே கூட இதன் அகலம் அதிகரிக்கத் தொடங்கலாம். அதிகபட்ச அகலம் என்பது 10செமீ ஆகும்.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

வெள்ளை முடியை விரட்டனுமா? கவலையை விடுங்க... இதோ சில அற்புதமான இயற்கை வழிகள் 

பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும் சளித்திசுக்கள்

சளித் திசுக்கள் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறுவது பிரசவ நேரம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறியப்பட்ட அறிகுறியாகும்.

கருப்பை வாய் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் அடர்த்தியான சளி பொதுவாக கர்ப்ப காலத்தில் கருப்பை வாய் திறப்பை மூடி வைத்திருக்கும்.

இந்த சளித் திசுவானது பிரசவத்திற்கு முன் வெளியேற்றப்பட வேண்டும். குழந்தையின் தலையிலிருந்து வரும் அழுத்தம் யோனியிலிருந்து சளி போன்ற நீர்ப்படலம் வெளிப்படுத்தப்படுவதற்கு காரணமாகிறது.

சில சமயங்களில் இரத்தம் கலந்த சளித்திசுக்களும் வெளியேறலாம். சில பெண்களுக்கு, பிரசவம் தொடங்கும் வரை சளி திசுக்கள் வெளியேற்றப்படுவதில்லை; மற்றவர்கள் பிரசவத்திற்கு முந்தைய நாள் இத்தகைய சளி வெளியேற்றத்தைக் கவனிக்க முடியும்.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

தினமும் தூங்கும் முன்னர் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை பலன்கள் உள்ளதா ? 

உள்ளுணர்வுகளில் மாற்றம் ஏற்படும்

குழந்தை பிறக்கப் போகிறது என்பதை உங்கள் உள்ளுணர்வு முன் கூட்டியே உணர்ந்து விடும். அதனால் அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்ய ஆரம்பிப்பீர்கள்.

உங்கள் குழந்தைக்கான அறையைத் தயார் செய்வது, அலங்கரிப்பது போன்ற வேலைகளில் உங்களை அறியாமல் ஈடுபடுவீர்கள்.

உங்கள் பிரசவ நேர சிரமங்கள், மூச்சு திணறல்கள் இதெல்லாம் இல்லாமல் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாவும் இருப்பீர்கள்.

இது உங்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து வகை உயிரினங்களுக்கும் இந்த உள்ளுணர்வு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

வாரத்திற்கு 3 முறை இந்த பருப்பை சாப்பிடுங்க..! கெட்ட கொலஸ்ட்ரால் இருமடங்கு வேகத்தில் குறையுமாம் 

பிரசவ வலி

விட்டு விட்டு ஏற்படும் பிரசவ வலி என்பது தான் உண்மையான குழந்தை வெளியேறுவதற்கான அறிகுறி எனலாம். இந்த வலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடலாம்.

குத்துவது போன்ற வலி, இடிப்பது போன்ற வலி, வயிற்றை இறுக்கும் வலி அல்லது மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வலி என்பது போல பல்வேறு வகைகளில் பிரசவ வலியானது ஏற்படலாம்

கர்ப்ப காலத்தின் மூன்றாவது மாத முடிவில் பிரசவ வலிக்கான அறிகுறிகள் மிக லேசானதாக தோன்றலாம். அது பொய் வலி என்று கூறப்படுகிறது. மிக லேசான நேரங்களில் வந்து மறைந்து விடும்.

ஆனால் அரை மணிக்கொருமுறை அல்லது 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இடுப்பு வலி அல்லது வயிற்று வலி ஏற்பட்டால் கண்டிப்பாக அது பிரசவ வலியே தான்.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலை சுத்தம் செய்ய இதை குடிக்கலாம்! உயிரிழப்பு இனி இல்லை 

வயிற்றுப்போக்கு

பிரசவ வலியின் ஆரம்ப கட்டத்தில், உடல் புரோஸ்டாக்லாண்டின்களை வெளியிடுகிறது, இது கர்ப்பப்பையை மென்மையாக்குகிறது மற்றும் கருப்பை சுருங்க உதவுகிறது.

கூடவே குடல் இயக்கத்தையும் தூண்டுகின்றன, அதனால் இயற்கையாகவே குழந்தை வெளியேற வழிவகுக்கும் வகையில் குடலைக் காலி செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.

இது ஒரு நல்ல அறிகுறியாகும், ஏனெனில் இது உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது மற்றும் பிரசவத்தின்போது எந்த அசௌகரியத்தையும் தவிர்க்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

கீழ் முதுகு வலி

பல பெண்கள் பிரசவ நேரங்களில் முதுகுவலியை அனுபவிக்கிறார்கள், குறிப்பாக குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கும் போது, கீழ் முதுகில் மந்தமான வலி வரும்.

முதுகுவலி மற்ற இடங்களில் உணரப்பட்ட வலி போன்றும் இருக்கலாம் அல்லது தானாகவே ஏற்படலாம்.

பிரசவத்திற்காக உடல் தயாராகும் சமயங்களில், குறிப்பாக இடுப்பு பகுதியில், மூட்டுகள் தளர்வதைப் பல பெண்கள் கவனிப்பதாக கூறப்படுகிறது. சிலருக்கு முதல் மூன்ற மாத கால கர்ப்பத்தின் இறுதிப் பகுதியில் இருந்தே இது நிகழத் தொடங்குகிறது.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

இந்த பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது

பனிக்குடம் உடைதல்

அம்னோடிக் சவ்வுகளின் சிதைவு அல்லது பனிக்குடம் உடைதல் என்பது எப்போதுமே உடனடி பிரசவ நேரத்திற்கான அடையாளம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பனிக்குடம் உடைவது என்பது பெரும்பாலான திரைப்படங்களில் காட்டப்படுவது போல அதிகப்படியான நீர் கொட்டுவது போல எல்லாம் இருக்காது.

சில நேரங்களில் சொட்டு சொட்டாக ஏற்படலாம். அம்னியோடிக் திரவம் என்பது நிறமற்றது மற்றும் வாசனை அற்றது. மிகவும் தூய்மையான நீர் போன்றது எனலாம்.

சிறுநீருக்கும் இதற்கும் நிறைய வித்யாசம் உண்டு. உங்கள் பனிக்குடம் உடைந்துவிட்டதாக நீங்கள் கருதினால் உடனடியாக மருத்துவரை அணுகிவிடுங்கள். 

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால் ஆபத்தா? அறிகுறியை அலட்சியப்படுத்தாதீர்கள் | Labour Pain Symptoms In Tamil

மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US